(இ - ள்.) மிக்க இத்தகுதியோடுகூடிய வளப்பத்தினாற் பெருமையுற்றுப் பிறவிக்கேதுவாகிய வினைகளை நீங்கும் கயிலாயத்தின்கண்ணுள்ள கங்கையினை அழைத்தவனாகிய குமாரப்பெருமான் ஒப்பில்லாத (பூசைக்குரியனவாகிய) பல பொருள்களையும் உளவாக்கினான். (வி - ம்.) பெட்பு - பெருமை. கருவினை - பிறவிக்கேதுவாகிய வினை. மறுவின்மாயை - சுத்தமாயை, இதனைச் "சூருயிர் குடித்தவன் சுத்தமாயையின் - ஆரவிவ்வகையெலா" மமைத்தானெனப் பின்னர்க் கூறுதலானறிக. (15) | இலக்கண முழுதமை யிலிங்கம் வேதிகை | | அலக்கணந் தித்தவர் விழையு மாலயம் | | மலக்கணம் விடைகொண்மண் டபங்கள் கோபுர | | நலக்கண மணிகொடு நவம தாக்கினான். |
(இ - ள்.) (சிற்பநூலில் இலிங்கத்திற்குக்கூறிய) இலக்கணமுற் றிலுமமைந்த இலிங்கமும், பீடமும், துன்பத்தின் முடிவைக் கண்டவரும் விரும்பத்தக்க கோவிலும், மலக்கூட்டங்கள் விடைகொள்ளுதற் கேதுவாகிய மண்டபங்களும், கோபுரங்களும் நல்ல கூட்டமாகிய அரதனங்களாற் புதிதாகச் செய்தான். (வி - ம்.) வேதிகை - பீடம் ; பூசைத்திண்ணை யென்பாருமுளர். அலக்கண் - துன்பம். அந்தித்தவர் - முடிவைக்கண்டவர். உம்மை விகாரத்தாற்றொக்கது. அலக்கணந்தித்தவரெனவே சீவன் முத்தரென்பது பெற்றாம். அவரும் ஆலயவழிபாடு செய்யவேண்டுமென்பார் "அலக்கணந்தித்தவர் விழையுமாலயம்" என்றார். இதனை "ஆலயந் தானுமரனெனத் தொழுமே" என்னும் சிவஞானபோதச் சூத்திரத்தானுணர்க. மலக்கணம் - மலக்கூட்டம். நலக்கணமணி - நல்ல கூட்டமாகிய அரதனம். (16) | பித்திகை யெங்கணும் பெருகு மான்மதம் | | மெத்திய சந்தன விழுது கொட்டுபு | | பைத்தெழு விரைப்புகை பாய்த்தி யோசனை | | பொத்திய மணங்குலாம் பொற்பி யற்றினான். |
(இ - ள்.) சுவர்த்தலமெங்கணும், வாசனை மிகுகின்ற புழுகையும் நிறைந்த சந்தனச்சாந்தையும் மெழுகிப் பரவியெழுகின்ற வாசனைப் புகையையும் பரவச்செய்து நாற்காததூரம் பொதிந்த வாசனை விளங்கும் பொலிவோடு செய்தான். (வி - ம்.) பித்திகை - சுவர். விழுது - குழம்பு. கோட்டுபு - பூசி. பைத்து - பரவி. விரைப்புகை - வாசனைப்புகை. யோசனை - நாற்காத தூரம். இதனை "ஒரு நாவிகலந்தோசனை கமழுமே" என்னும் சிந்தாமணி (விமலை 13) செய்யுளானு முரையானு முணர்க. பொத்திய - (17) | தூண்டொறும் வாருறை சேர்த்தித் தூங்குகாய் | | மாண்டமென் கதலிவார் கரும்பு பூகதம் |
|