கற்களு மிளகும்வண்ணம் பரவி முழங்கவும், ஒளிபொருந்திய இரத்தினங்கள் பதித்த கோவிலையண்மினான். (வி - ம்.) இயம் - வாத்தியம். நுடங்கினர் - முற்றெச்சம். உம்மை விகாரத்தாற்றொக்கது. நரம்பு - நரப்பு என விகாரம் ஆயிற்று. (27) | தானிருக்குந் திருவெல்லை தனக்குவட கீழ்ஞாங்கர் | | ஆனிருக்கை கொளவாவச் சகாயனையன் பொடுமிருத்தி | | வானிருக்கு மளப்பரிய வழிபாடு புரிந்தருவித் | | தேனிருக்கு மலர்க்கடப்பந் தெரியலான் மகிழ்வித்தான். |
(இ - ள்.) தானெழுந்தருளி யிருக்குந் திருவெல்லையின் வடகிழக்குப் பக்கத்தில் அவ்விடத்தெழுந்தருளி யிருக்கும்படி ஆவச்சகாயனென்னும் விநாயகப்பெருமானை அன்போடு மெழுந்தருளச்செய்து மேலாகிய வேதங்களு மளத்தற்கரிய வழிபாட்டினைச் செய்து அருவிபோலத் தேனொழுகிக்கொண்டிருக்கும் கடப்பந்தாரினை யணிந்த முருகப்பெருமான் மகிழ்ச்சியை யுண்டாக்கினான். (வி - ம்.) ஞாங்கர் - பக்கம். ஆன் - அவ்விடம். வான் - மேன்மை. (28) | பிணிகிழங்கி னொடும்பெயர்த்துப் பெயராத நிலையருளும் | | கணிகைவரை யடிச்சாரற் கயிலாய கங்கைமுகந் | | தணிகிளர்பன் னிறைநிரப்பி யல்லனவும் பலர்புரியத் | | தணிவிறன திருக்கைவட சாரமைத்த வாலயத்துள். |
(இ - ள்.) ஆணவமலமாகிய நோயை மூலத்தோடும் நீக்கி என்றும், நீங்காத நிலைமையினைத் தரும் தணிகைமலையின் அடியின்கண்ணுள்ள கயிலாய கங்கையினை மொண்டு அழகு விளங்குகின்ற பல பாண்டங்களில் நிறையச்செய்து ஏனைய திருத்தொண்டுகளையும் பலர் செய்யாநிற்பக் குறைதலில்லாத தனதிருக்கையின் வடபக்கத்து அமைத்த ஆலயத்தின்கண். (வி - ம்.) பிணி - இரண்டாவதன் றொகை. பெயராதநிலை - முத்திநிலை. நிறை - பாண்டம். (29) | கருவிகளு மறியாமை கதுவவரு கேவலமும் | | ஒருவியெழு பரஞானத் துளச்செயலைத் தபத்தோற்றும் | | பெருகுபர மானந்தப் பெருநிலைமைப் பொருளேயாம் | | முருகனருட் குறிப்பதிட்டை முறையியற்றிப் பூசிப்பான். |
(இ - ள்.) கருவிகளோடுகூடிய சகலநிலையும், அறியாமைபொருந்த வருகின்ற கேவலநிலையும் நீக்கி, யெழுகின்ற பரஞானத்தினாலே ஆன்மாவின் செயலைக் கெடும்படி தோற்றுகின்ற பெருகுகின்ற பரமாநந்தப் பெருநிலைப் பொருளாகிய முருகப்பெருமான் சிவலிங்கப் பிரதிட்டையை ஆகம முறைப்படி செய்து பூசிப்பானாயினன். |