பக்கம் எண் :

குமரேசப் படலம்267

(வி - ம்.) கருவி - ஈண்டுக் கருவிகளோடுகூடிய சகலாவத்தை. பரஞானம் : மூன்றாவதன் றொகை. உளம் - ஈண்டு ஆன்மா; இதனை, "நானிவனென் றெண்ணினர்க்கு நாடுமுள முண்டாதல்" என்னும் சிவஞானபோதச் செய்யுளானறிக. பிரதிட்டை - விகாரம்.

(30)

 குருமணியி னொளிப்பிழம்பு கொழுந்தோடிப் பல்கணியாய்
 மருவுகத வெனத்தோற்று மணிவாயி லிருபுடையும்
 பொருவில்பர மபரமெனப் புகன்ஞான மிரண்டனையும்
 அருணிலையுந் திருவெழுத்தி னருச்சனைசெய் தமைத்திட்டான்.

(இ - ள்.) நிறத்தோடுகூடிய அரதனங்களின் ஒளிப்பிழம்பானது கொழுந்துவிட்டோடிப் பல கண்களையுடையதாகிப் பொருந்துகின்ற கதவென்று சொல்லும்படி தோற்றுகின்ற அழகிய வாயிலி னிருபக்கங்களினும் ஒப்பில்லாத பரஞானம் அபரஞானமெனச் சொல்லுகின்ற ஞானமிரண்டினையும் அருணிலைத்தற் கேதுவாகிய திருவஞ்செழுத்தால் அருச்சனைசெய்து துவாரபாலகராக வமைத்தான்.

(வி - ம்.) பரஞானம் அபரஞான மிரண்டனையுந் துவாரபாலகராக அஞ்செழுத்தாலமைத்தா னென்க.

(31)

 பூதமுதற் கரணமெலாம் புறமாக வகம்புறமற்
 றாதரவி னிடைமூழ்கி யமைத்தபொரு ளவையனைத்தும்
 வேதமுடி கடந்தொளிரும் விழுப்பொருளி னிறைவாக்கித்
 தீதனுக்கு மஞ்செழுத்துஞ் செயிர்விரவா முறைமாறி.

(இ - ள்.) பிருதிவி தத்துவ முதலிய கரணங்களெல்லாம் புறத்ததாக அகப்பற்றும் புறப்பற்றும் நீங்க அன்பினிடத்தே மூழ்கிப் படைத்த பொரு ளெல்லாவற்றையும், வேதங்களின் முடிவையுங் கடந்து விளங்குகின்ற சிறந்த செம்பொருளிற்றானும் நிறைந்திருப்பதாகப் பாவித்துப் பிறவித் துன்பத்தைப் போக்கும் திருவஞ்செழுத்தினையும் குற்றங் கலவாத முறைப்படி மாறியுச்சரித்து.

(வி - ம்.) பூதமுதற் கரணமெலாம் புறமாக அகம்புறமற் - றாத ரவி னிடை மூழ்கி" என்றதனால் பூதசுத்தியும், "அமைத்தபொரு ளவை யனைத்தும் நிறைவாக்கி" யென்றதனாற் றிரவியசுத்தியும், வேதமுடி கடந்தொளிரும் விழுப்பொருளி னிறைவாக்கி" யென்றதனால் இலிங்க சுத்தியும் கூறினர். உடலைத் தகித்தவழி அகம்புற மென்பதின்றாகலின் "அகம்புறமற்"றென்றார். பூசைக் குபகரணங்களாக முன் சுத்தமாயை யாலமைத்த பொருள்களையெல்லாம் வேதமுடிவையுங் கடந்த மந்திரங்களினாலே நிறைவாக்கி யென்க. நிறைவு - ஈண்டுச் சுத்தமென்னும் பொருட்டு. செயிர் - குற்றம். ஈண்டுக் குற்றந் தருதற்குரிய நமக்களை யுணர்த்திற்று.

(32)

 பாதமுக முடிக்குதவு பாத்தியமா திகளெல்லாம்
 பேதமறு மருள்கடந்த பேரெழுத்தி னினிதமைத்தங்
 காதனமு மூர்த்தியுமூ லமுமந்தத் திருவெழுத்தால்
 ஏதமற வுயிரெல்லா மிணர்மலர்கொண் டருச்சித்தான்.