(வி - ம்.) கலிங்கம் - ஈண்டுத் திருவொற்றாடை. அட்டி - அப்பி. மடுத்தல் - நிறைத்தல், என வென்பது உவம வுருபு. நாண் - அரை ஞாண். (35) | குண்டலமுங் கதிர்த்தோடுங் குருக்கிளர்பொன் மணிமுடியும் | | கண்டசர மங்கதமுங் காழ்பணியு மலர்த்தொடையும் | | ஒண்டொடியு மோதிரமு மொளிருதர பந்தனமும் | | மண்டுகுர னூபுரமு மற்றுமெடுத் தலங்கரித்தான். |
(இ - ள்.) குண்டலமென்னு மணியும், ஒளிபொருந்திய தோடென்னு மணியும், நிறம் விளங்குகின்ற பொன்னாலாகிய அழகிய திருமுடியென்னு மணியும், கண்டமாலையும், தோளணியும், சரமாகிய அரதனாபரணங்களும், மலர்மாலையும், ஒள்ளிய வீரவளையலும், விரலாழியும், விளங்குகின்ற வயிற்றிற்கட்டுங் கச்சும், நெருங்கிய ஒலியோடுகூடிய காலணியு மற்றுமுள்ளனவாகிய அணிகளையு மெடுத் தலங்காரஞ் செய்தான். (வி - ம்.) குரு - நிறம். கண்டசரம் - கழுத்திலிடுமாலை. அங்கதம் - தோளணி. காழ்பணி - சரமாகிய ஆபரணம். உதரபந்தனம் - இடையிற்கட்டும் பரிவட்டம (36) | பாறயிர்நெய் புளிகடுகு பயறுசருக் கரைதிலகம் | | வேறுவிர வியவல்சி வெற்றன்னங் குய்க்கருனை | | ஊறுசுவைச் சிற்றுண்டி யொண்வறையல் கனிபுனலும் | | தேறுமனு மொழிந்தமுது செய்தருள மகிழ்சிறந்தான். |
(இ - ள்.) பாலுந், தயிரும், நெய்யும், புளியும், கடுகும், பயறும், சருக்கரையும், எள்ளுமாகிய இவைகளை வெவ்வேறு கலந்து செய்த திருவமுதும் ஒன்றுங் கலவாத தூய அன்னமும், தாளிப்போடுகூடிய பொரிக்கறியும், சுவையூறுகின்ற பண்ணிய வகைகளும் ஒள்ளிய வறுவலும், தீங்கனிகளும், பானக முதலிய நீர்வகையும், (இவைகளை யுண்டாக்கும்) தெளிந்த மந்திரங்களைச் சொல்லுதலாற் றிருவமுது செய்தருள மகிழ்சிறந்தான். (வி - ம்.) வல்சி - உணவு. குய் - தாளிப்பு. கருனை - பொரிக்கறி. இதனை "வெருக்குக்கண் வெங்கருனை" யென்னும் நாலடிச் செய்யுளா னறிக. சிற்றுண்டி - பலகாரம். வறையல் - வறுவல். புனல் - பானகம். நீர்மோர் முதலியன. (37) வேறு | பூசுபுனல்கரத் தேந்திப் பாத்தியமா சமனமருக் கியம்பூ ரித்து | | வாசமலி பாகடையின் சுருணீட்டி மணித்தூபந் தீபம் வட்டித் | | தாசறுபஃ றீபவா ராதனையும் புரிந்தாடி யாதி யுய்த்து | | நேசமலி புகழ்பரப்பி வலம்வந்து நிலத்திறைஞ்சி நின்றா னாங்கு. |
(இ - ள்.) கரசுத்தி முதலியன செய்கின்ற நீரினைக் கையின்கண் ணேந்திப் பாத்தியமும், ஆசமனமும், அருக்கியமும், நிறைத்து வாசனை |