பக்கம் எண் :

குமரேசப் படலம்271

(வி - ம்.) திருமகனை - வேற்றுமை மயக்கம். கொறுகொறுக்கும் - கோபிக்கும். இதனை "இனிச்சிறி தெழுந்து நீங்கி யிட்டிடை கோறு நாங்கள், எனக்கொறு கொறுப்ப போலு மிளமுலைப் பரவை யல்குல், கனிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக்கொம் பொப்பாள், பனிப் பிறைப் பூணி னான்றன் பாண்வலைச் சென்று பட்டாள்" சிந்தாமணி (சுரமஞ். 46) செய்யுளானு முரையானு முணர்க.

(40)

 இருளனுக்கி யொளிபெருக்கு மவ்விலிங்கம்
           குமாரலிங்க மெனும்பேர் பூணும்
 மருளிரிக்கு ஞானசத்தி தரித்தலினாற்
           கணிகவரை வாழ்க்கை பூண்ட
 தருநிகர்த்த குரிசிலுக்கு ஞானசத்தி
           தரனென்னச் சாற்று நாமம்
 பொருண்மிகுத்த பலபெயரின் மிக்கபெய
           ராயங்குப் பொலிந்த தன்றே.

(இ - ள்.) ஆணவமாகிய இருளினைக் கெடுத்து ஞானமாகிய வொளியினை மிகச்செய்யு மவ்விலிங்கமானது குமாரலிங்க மென்னும் பெயரைப் பொருந்தும். அஞ்ஞான காரியமாகிய மயக்கத்தைக் கெடுக்கும் ஞானசத்தியாகிய வேலினைத் தரித்திருத்தலான் தணிகைவரையின் கண் வாழ்தலை மேற்கொண்ட (தன்னடியார்க்கு வேண்டுவனவற்றைக் கைம்மாறு கருதா தளித்தலினால்) கற்பகதருவினை யொத்த தலைவனாகிய முருகப்பெருமானுக்கு ஞானசத்தியைத் தரித்திருப்பவன் என்று சொல்லப்பெற்ற திருப்பெயர் புகழ்மிகுந்த அப்பெருமானுடைய பல திருப்பெயர்களுள் மேலான திருப்பெயராகி ஆண்டு விளங்கியது.

(வி - ம்.) அனுக்கி - கெடுத்து. பொருள் - புகழ்.

(41)

 வெள்ளிவரை யிருத்தலினாற் கயிலாய கங்கையென விளங்குந் தீர்த்தம்
 தெள்ளுபுகழ்க் கணிகவரைக் குமரனழைத் தாடிமகிழ் திளைத்து முக்கண்
 வள்ளலுக்கு மாட்டுதலாற் குமாரதீர்த் தப்பெயரின் வயங்கு மப்பேர்
 உள்ளினவ ரெழுபவத்திற் காதரமு மெழுந்திரிய வுருக்கு மாலோ.

(இ - ள்.) வெள்ளிமலையின்கட் டங்குதலினாற் கயிலாய கங்கை யென்னுந் திருப்பெயருடன் விளங்குகின்ற தீர்த்தமானது தெளிந்தபுகழோடு கூடிய தணிகைமலையின்க ணெழுந்தருளியிருக்கிற முருகப்பெருமான் அழைத்து மூழ்கி மகிழ்ச்சியுற்று மூன்று திருக்கண்களையுடைய வரையாது கொடுக்குந்தலைவனாகிய சிவபெருமானுக்கும் அபிடேகஞ் செய்தலான் குமார தீர்த்தமென்னுந் திருப்பெயருடன் விளங்கும். அத் திருப்பெயரை நினைத்தவர்களுடைய எழுவகைப் பிறப்பின்கண்ணு முளவாகிய துன்பங்களு மெழுந்தோடும் வண்ணம் வருத்தும்.

(42)

 கும்பமதி வருமகத்திற் குமரவே ளினிதாடிக் குழகற் காட்டும்
 வம்பவிழ்பூங் கயிலாய கங்கையிடை யம்மதியின் மகத்திற் சென்று