பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்279

ஆராய்ந்து (அருமையாகத்) தேடல்போலப் பரிசுத்தம் பொருந்திய மென்மையான கிழங்கு பழ முதலிய பொருள்களை அருமையாகத் தேடி ஒப்பற்ற வில்லையுடைய வேடர்கள் திரியப்பெறுவது ஒருபகுதியி னிடங்களிலெல்லாம்.

(வி - ம்.) துனி - துன்பம். சூழ்ந்தனர் - முற்றெச்சம். நேடல் - தேடல். புரைகிளைஇ - அருமையாகத் தேடி; இதனை "எழில்செய் தம்முடை யுறுப்புநே ருறுப்புடை யேழையர் தமைக்காண, விழையுங் காதலிற் புரைகிளைத் தாலென வியன்மலைத் தலைதோறும், வழியு மும் மதக் களிற்றொடு பிடிகளும் வயந்திக ழரிமாவு, முழையும் வைகலு நுழைவன பயில்வன வுழிதரு வனமன்னோ" எனுங் காஞ்சிப்புராணம் (நகரேற்றுப் படலம் 83) செய்யுளா னறிக.

(14)

 தூசு மின்கல னும்விரை யுந்துதை
 வேசி மாதரின் வேழக்க தலியில்
 பூசல் வேழம் புணர்ந்துவி டுந்திறம்
 ஆசு மில்பயம் பார்ந்ததொர் பாலெலாம்.

(இ - ள்.) நல்லுடையும், கண்டார்க் கினிமையைத் தருகின்ற ஆபரணங்களும், வாசனைப் பொருள்களும் பொருந்தப்பெற்று (தன்மை யடைந்த ஆடவரைக் கூடிவிடுந் தன்மை சிறிதுமில்லாத) பரத்தையரைப் போலக் கரும்பினாலும் வாழைகளினாலும் முழக்கத்தையுடைய யானைகளைக் கூடி மேலேற விடுந்தன்மை சிறிதுமில்லாத கொப்பங்கள் நிறைந்தன ஒருபகுதியினிடங்க ளெல்லாம்.

(வி - ம்.) கரும்பானும் வாழையானும் யானையைப் புணர்ந்துவிடுந் திறஞ் சிறிதுமில்லாத பயம்பென்க. "புணர்ந்துவிடுந்திற மாசுமில்" என்னும் பொருளடை உவமையினுஞ் சென்றியைந்தது. வேழக்கதலி - யானைக் கொம்பன் வாழையென்பாரு முளர். பயம்பு - யானைபிடிக்கும் பள்ளம்; இதனை "மாப்பயம் பின்பொறை போற்றாது" என்னும் புறப்பாட்டி னடியா னுணர்க. யானை வேட்டஞ் செய்வோர் பெரிய பள்ளந் தோண்டி நொய்தான மூங்கில் கொறுக்கச்சி முதலிய புறக்காழை யுடையவைகளைப் பரப்பித் தரை போலச்செய்து அதன்மேற் கரும்பு வாழை முதலியவைகளை நாட்டிச் சோலைபோல வலங்கரித்து வைத்தல் முறை. அதனைச் சோலையென மயங்கி யானை பயம்பில் விழும். அதனைக் கைப்பற்றிக் கொள்வ ரென்க. இஃது உவமையணி.

(15)

 வீங்கு தோட்குடை வேய்வியங் கோளுறீஇ
 ஆங்க ணிற்ப தமரவ ணங்கனார்
 தாங்கு தீம்புனஞ் சார்புட்கு லந்தப
 ஓங்கு முத்தெழ வூழ்க்குமொர் பாலெலாம்.

(இ - ள்.) தெய்வப் பெண்களை யொத்த கொடிச்சியருடைய பருத்த தோள்களுக்குத் தோற்ற மூங்கில் அவர்கள் ஏவலைப் பெற்று ஆங்கணிற்பதை யொப்ப, அவர்களாற் காக்கும் இனிய தினைப்புனத்தின்கட் பொருந்தும் பறவையினங்கள் நீங்க உயரும். அவை, முத்தங்கள் புறத்தே தெறிக்கச் சிந்துமொரு
பகுதியினிடமெல்லாம்.