(இ - ள்.) தன் பெருமையைப் பல தேசத்தாருங் கூறுகின்ற சேயாறு நந்தினி முகலி முதலிய (தம்மிடத்து மூழ்கினவர்களின்) பிறவித் துன்பத்தை நீக்குகின்ற பல நதிகளுமிப் பாலியாற்றினோடு ஒலிக்கின்ற நீராற் றலையளி செய்யப்படும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென்னும் நால்வகை நிலத்தின்கண் பயில்கின்ற ஐந்திணையின் வளஞ் சிறிது சொல்லப்படும். (வி - ம்.) முழங்குதல் - தன் பெருமையைப் பல தேசத்தாரு மிகக் கூறுதல்; நந்தி நந்தினியென்பது முதல் குறைந்து நந்தினியென நின்றது; சேய்நதி - சேயாறு; இவையிரண்டையுங் காஞ்சிப்புராணத்திலறிக; பழங்கண் - துன்பம்; 'முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்' என்றாராகலின் நானிலத்து வழங்கு மைந்திணை யென்றார். நீரைக் கொடு யாறுகள் பலவும் இப்பாலி யாற்றோடு கூடித் தலையளி செய்யும் நானிலமெனக் கூட்டுக. தீர்க்கும் நதி : விகாரம். நானிலத்து வழங்கும் ஐந்திணை வளஞ் சிறிதுரைப்பாமென்ற குறிப்பால் திணைமயக்கங் கூறுதலும் பெற்றாம். (31) குறிஞ்சி | | மருந்துண்விண்ணர மடந்தையர்க் கரியதன் மார்பந் | | | திருந்து தங்குலத் தவட்கருள் சிறப்பினான் மகிழ்ந்து | | | விருந்து நித்தலுஞ் செய்வபோல் வெற்பர்வே லிறைக்குப் | | | பொருந்து பூசனை விழாத்தின மெடுப்பது பொருப்பு. |
(இ - ள்.) தேவாமிர்தத்தை யுணவாக உண்ணுகின்ற தேவருலகத்தின் கணுள்ள அரமடந்தையர்க்குந் தழுவுதற் கரியதாகிய தனது திருமார்பத்தை (உலகிலுள்ளவர்கள் தரிசித்து உள்ளம்) திருந்துதற் கேதுவாகிய தங்குலத் துதித்தவளாகிய வள்ளிநாயகிக்கு அருளிச்செய்த சிறப்பினால் மகிழ்ச்சியுற்று அந்நிலத் தலைவராகிய வேற்படையையுடைய முருகக் கடவுளுக்கு விருந்தினை நாடோறுஞ் செய்வனபோல் பூசனையும் விழாவும் குறிஞ்சி நிலத்துள்ள கானவரால்நாடோறு மெடுக்கப்படுவது பொருப்பு. (வி - ம்.) பூசனை விழா : உம்மை தொக்கது. மருந்து - அமிர்தம். விண் : ஆகுபெயர். மகளிர்க்கு மென்னு முயர்வுசிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. இது தற்குறிப் பேற்றவணி. (32) | | வணங்கு மாருயிர்க் குகைதொறும் வதிதலாற் குகனென் | | | றிணங்கு வான்பெயர்க் கியையுமா றிருப்பது போலாம் | | | நிணங்கொள் வேற்படை நின்மல னிரைமணிக் குகையின் | | | கணங்கொண் டோங்கிய மலைக்கெலாங் கடவுளாய்க் கலத்தல். |
(இ - ள்.) பகைவருடலிற் புகுதலால் மாமிசத்தைத் தன்னிடத்தே கொண்ட வேற்படையையுடைய மலமில்லாதவராகிய குமரநாயகர் வரிசையாக மணிகள் தங்கப்பெற்ற குகைகளின் கூட்டத்தைத் தன்னிடத்தே கொண்டுயர்ந்த மலைக்கெல்லாங் கடவுளாகப் பொருந்தியிருத்தல் |