| தரம்பு செய்யும், கலியது பிறவிகண்டாம்" எனும் (சிந்தாமணி முத்தி. 119) செய்யுளடிகளானு முரையானு முணர்க. தொண்டகம் - குறிஞ்சிநிலப்பறை. வங்கியம் - ஊதுகொம்பு. சுரம் - பாலைநிலம். பொற்கென்ன - தழைத்துப் பொலிவுபெற. உம்மை - விகாரத்தாற் றொக்கது. (19) | | அற்ப கத்திமை யாரண்மிச் சிந்திய | | | கற்ப கக்கடிப் போதுங் கலன்களும் | | | பொற்ப கப்பொழில் கைசெய்தெ னப்பொலி | | | வெற்ப கத்துவி ளங்குமொர் பாலெலாம். |
(இ - ள்.) பொலிவைத் தன்னகத்தேயுடைய சோலையானது அலங்கரித்தாற்போல விளங்குகின்ற திரிகூடமலையி னொருபகுதியி னிடங்களிலெல்லாம், அகத்தே யுன்பினையுடைய தேவர்கள் பொருந்திச் சிந்தப்பெற்ற வாசனை பொருந்திய கற்பகமலர்களும் ஆபரணங்களும் விளங்கும். (வி - ம்.) போதுங் கலன்களும் ஓர்பால் விளங்குமென்க. சோலையான தலங்கரித்தாற்போலப் பொலியும் வெற்பெனக் கூட்டுக. கடி - வாசனை. அகத்தன்பென மாற்றுக. (20) | | தென்றல் சந்தனஞ் செந்தமி ழென்றிவை | | | நன்ற ளிப்பந றும்பொதி யந்தழீஇ | | | நின்ற தாங்கொரு பாலென நீண்டவக் | | | குன்றெ லாமவை கூர்ந்தன மிக்கரோ. |
(இ - ள்.) தென்றற் காற்று, சந்தனம், செவ்விய தமிழ் என்று சொல்லப்பட்ட இவை மூன்றினையும், உலகத்தார்க்குப் பெரிதுங் கொடுக்க நல்ல பொதியின்மலையை யாங்கொரு பக்கத்துத் தழுவி நின்ற தென்று சொல்லும்வண்ணம் நீண்ட திரிகூடமலையின் ஒருபகுதியினிட மெங்கணும் தென்றலுஞ் சந்தனமுந் தமிழுமாகிய இவை மூன்றும் மிகவும் அதிகரித்தன. (வி - ம்.) ஒருபாலளிப்பப் பொதியந் தழீஇ அங்கு நின்றதென்று சொல்ல நீண்ட அத்திரிகூடத்தில் அம்மூன்றும் மிக்கனவென வினை முடிவு செய்க. நன்று - பெரிது. குன்று - திரிகூடம். (21) | | இருபு டைக்க ணிருபெருந் தேவரும் | | | மருவ நாப்பண்ம தலையிற் றாங்கிய | | | ஒருபெ ரும்பெய ருத்தமன் போன்மெனப் | | | பொருவின் முத்தலை பூத்ததக் குன்றமே. |
(இ - ள்.) திரிகூடமலையானது இரண்டு பக்கலிலும் இரண்டு பெரிய கடவுளராகிய விண்டு பிரமர்கள் பொருந்த நடுவே தூண் போலத் தாங்கிய ஒப்பற்ற பஞ்சாக்கரப் பொருளாகிய சிவபெருமானை யொக்குமென்று சொல்லும்வண்ணம் ஒப்பில்லாத மூன்று சிகரங்களை யுடையதா யிருந்தது. |