பக்கம் எண் :

282தணிகைப் புராணம்

(வி - ம்.) இருபெருந்தேவர் - விண்டுபிரமர்கள். மதலை - தூண். பெரும் பெயருத்தமன் - பஞ்சாக்கரப் பொருளாயுள்ள சிவபெருமான்; முன்னர்க் கூறினாம். பூத்தது - படைத்தது. போன்ம் - மகரம் குறுக்கம்.

(22)

 இச்சை ஞானந்தொ ழிலிவை மூன்றனோ
 டச்ச னின்றனைத் தும்விளைத் தாலென
 முச்சி ரத்தொடு நின்றுமு றைமுறை
 பொச்ச மில்வளம் பூப்பதக் குன்றமே.

(இ - ள்.) அத் திரிகூட மலையானது தந்தையாகிய சிவபெருமான் அறிவிச்சை தொழிலாகிய மூன்றினால் எல்லாவற்றையும் படைத்தாற் போல மூன்று குவடுகளோடு நிலைபெற்று முறைப்படி பொய்யில்லாத வளங்களை விளைப்பது.

(வி - ம்.) அச்சன் - தந்தை; இது குடநாட்டுச்சொல், பொச்சம் - பொய்.

(23)

 முத்தொ ழிற்குரி யாரொரு மூவரும்
 எய்த்து றாமையி னிதுறத் தாங்கியோர்
 கத்த னுண்டெனக் காட்டுமா தாரமாய்
 அத்தி ரிக்குவ டேந்தும டுக்கலே.

(இ - ள்.) ஆதாரமாகி நின்று அம்மூன்று சிகரங்களைத் தாங்கிய மலையானது படைத்தல், காத்தல், அழித்தலாகிய மூவகைத் தொழிற்கு முரியராகிய ஒப்பற்ற பிரமன் விண்டு உருத்திரனாகிய மூவரும், அத் தொழிலை யியற்றித் துயக்கமுறாம லினிதாகத் தாங்க ஒப்பற்ற கருத்த னொருவனுளனென்று காட்டாநிற்கும்.

(வி - ம்.) எய்த்தல் - இளைத்தல். திரிக்குவடு - மூன்றுசிகரம். தாங்கியெனும் செய்தெனெச்சம் தாங்கவெனச் செயவெனெச்சமாய்த் திரிந்து நின்றது.

(24)

 மூன்று மெய்ப்பொருண் மூன்றுமொற் றித்தலில்
 தோன்று மொன்றென வென்றுது ணிப்பபோன்
 னெ்றே னச்சிக ரம்முகிழ்த் தொன்றெனத்
 தோன்ற நிற்குமூ லத்தினத் தொல்வரை.

(இ - ள்.) உண்மைப் பொருள்கள் மூன்றாகும் அம்மூன்றுண்மைப் பொருள்களும் ஒன்றினொன்று வியாப்பியமாயிருத்தலின் ஒரு பொருளாகக் காணப்படுமென்று வரையறுத்துக் காட்டுவனபோல அப்பழமையான மலையானது சிகரங்கள் மூன்றென்று சொல்லும்வண்ணந் தோன்றச் செய்து அடிப்பாகத்தானொரு பொருளெனத் தோன்றா நிற்கும்.

(வி - ம்.) உண்மைபொருள் மூன்றாகு மென்க. மூன்று என்னும் எண்ணுப்பெயர் சொல்வான் குறிப்பான் அவனென்னுஞ் சுட்டுப்பெயர் மாத்திரை யாயிற்று; "நாணிநின்றோள்" (அகநா. 19) என்றும் "அணங்கருங் கடவுளன்னோள்" (அகநா. 16) என்றும் அகத்திற்