பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்283

கூறினாற்போல. இது பொருளொடு புணராச் சுட்டுப்பெயராயினும் (தொல். சொல். கிள. 37) என்னுஞ் சூத்திரவிதி. மெய்ப்பொருள் மூன்றாகும் அம்மூன்று மொற்றித்தலினால் ஒன்றெனத் தோற்றுமென வினைமுடிவு செய்க. மெய்ப்பொருள் மூன்று - (அக்கரங்களிலைந்தில் இறுதியிரண்டொழிந்த ஏனைய) மூன்றக்கரங்களின் பொருள்கள். அம் மூன்றக்கரமும் பொருளினா லொன்றிலொன் றடங்கும். முறையாவன, பாசம் பசுவிலும், பசு பதியிலும் பொருந்துமென்க. அங்ஙனம் பொருந்திய வழி பதியொன்றாகவே மதிக்கப்படும்.

(25)

 ஈண்டுப் போந்தவ ரிம்மைம றுமையும்
 மீண்டு றாதமெய் வீடுமு றுபவென்
 றாண்டுத் தானரு ளும்பயன் காட்டலும்
 மாண்ட தான்மும்ம ணித்தலை யோங்கலே.

(இ - ள்.) மூன்று சிகரங்களையுடைய மலையானது இம்மலையின் கண் வந்தவர்கள் இம்மைப் பயனையும், மறுமைப் பயனையும், எக்காலத்து மீடலல்லாத உண்மையாகிய வீட்டின்பத்தினையும் அடைவார்களென்று ஆண்டுத்தானளிக்கும் பேற்றைக் காட்ட மாட்சிமைப்பட்டது.

(வி - ம்.) போந்தவர் - வந்தவா. இம்மை மறுமை : ஆகுபெயர். உறுப - அடைவார்கள். பயன் - பிரயோசனம். காட்டலும் - உம் மீற்று வினையெச்சம்; செயவெனெச்சப் பொருளுணர்த்தி நின்றது.

(26)

 மூவர் மும்மறை மூவகை யாருயிர்
 மூவ கைச்சுடர் மூவுல குந்தொழும்
 மூவ ருந்தலை வன்னுரு மூவகைத்
 தாவ துந்தெரிக் கும்மவ்வி லங்கலே.

(இ - ள்.) அம்மலையானது, அயனரியர னென்னு மூவரையும், இருக்கு, யசுர், சாமமென்னும் மூன்று வேதங்களையும், சகலர், பிரளயா கலர், விஞ்ஞானகலரென்னு மூவகை யரியவுயிரினையும், சோமசூரியாக்கினி யென்னும் மூன்று சுடரினையும், சுவர்க்க மத்திய பாதலமென்னும் மூன்றுலகங்களையும், யாவரும் வணங்கத்தக்க இறைவன் றிருவுருவம், அருவம் உருவம் அருவுருவம் என மூன்றுவகைத் தாதலையும் தெரிவிக்கும்.

(வி - ம்.) மூவரும், மும்மறையும், மூவகையுயிரும், மூவகைச் சுடரும், மூவுலகும் அம்மலை தெரிவிக்குமெனவும், அரு உரு அருவுருவென்னு மிறைவன் மூன்று திருவுருவங்களையும் தெரிவிக்குமெனவும் வினைமுடிவு செய்க. மூவர் முதலியவற்றிற்கு ஐயுருபு விரிக்க. மூ - மூப்பு. அருமை இன்மைமேற்று. உம்மை யிறந்தது தழீஇயது.

(27)

 இலைமு கப்பசும் பூண்களி டையிடைத்
 தலைய மைத்தத னிவரை மார்பகம்
 நிலையு மாரநி கர்த்திடும் பல்சுனை
 உலைய வீழ்ந்திழிந் தூரும ருவியே.