பக்கம் எண் :

284தணிகைப் புராணம்

(இ - ள்.) பல நீர்ச்சுனைகள் வருந்த வீழ்ந்திழிந்து செல்கின்ற அருவியானது அவ்வொப்பற்ற மலையினது மார்பினிடத்து இலைவடிவாகச் செய்யப்பெற்ற ஆபரணங்களி னிடையிடையே முதன்மை தங்கச்செய்த முத்தாரத்தினை யொக்கும்.

(வி - ம்.) சுனையின்கண் வீழு மருவியானது இலைமுகப்பூண்களி னிடையிடையே நிலையு மார நிகர்த்திடுமெனக் கூட்டுக. தலையமைத்த - முதன்மையாகத் தங்கச்செய்த. உலைய - வருந்த. ஊரும் - செல்லும்.

(28)

 ஆங்கு நாத னருணட மாடுதல்
 ஓங்கு மப்பதி யொண்மைவ ளத்தினுக்
 கியாங்கு மொப்பிலை யென்றும தித்துளந்
 தாங்கு மின்பத்த ருக்கெனத் தக்கதே.

(இ - ள்.) அவ்விடத்தின்கண் இறைவன் அருளோடுகூடி நடஞ்செய்தல் (எல்லாப் பதிகளினும்) உயர்ந்த அப்பதியின்கண்ணுள்ள ஒள்ளிய வளப்பத்தினுக்கு எவ்வுலகத்தினு மொப்பில்லை யென்று கருதி உளத்தினிடத்துத் தங்கும் தருக்கினாலென்று சொல்லத் தக்கதாகும்.

(வி - ம்.) ஆடுதலான கருத்து இன்பத் தருக்கெனத் தக்கதென முடிக்க. மதித்து - கருதி. இங்குப் பஞ்ச சபைகளிலொன்றாகிய சித்திரசபை யுள்ளதென்க.

(29)

 அனாதி யாகிய வண்ணல மர்ந்தவத்
 தெனாதுத் தாலகத் தேத்தினை யண்மினான்
 மனாதி மம்மர்த்த ணந்தும கிழ்கொள
 இனாத தீர்க்குமி ருந்தவ மாற்றினான்.

(இ - ள்.) அனாதிமுத்த சித்துருவாய தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற தெக்கணுள்ள உத்தாலகவன மென்னுமிடத்தைக் குறுகி மனத்தின்கண்ணுள்ள மயக்கம் நீங்கி மகிழ்ச்சியடையத் துன்பத்தினை நீக்கும் பெரிய தவத்தினைப் பிரமன் செய்தனன்.

(வி - ம்.) 6ஆவது செய்யுளில் அடைவுற்றவ னென்னும் எழுவாய் அண்மி ஆற்றினா னென்னும் பயனிலை கொண்டது.

(30)

வேறு

 வருவைகலின் வாராதெழு வாமான்மணி யிரதத்
 தொருசெங்கதி ரமரன்றண வுறினும்வர வொழியா
 அருவிப்புனன் முக்காலமு மாடிப்பொடி பூசித்
 திருமல்கிய வருள்கண்மணி சிரமாதியி னணியா.

(இ - ள்.) தாவிச் செல்கின்ற குதிரைகள் பூட்டிய அழகிய தேரினை யுடைய ஒப்பற்ற சிவந்த கிரணங்களையுடைய சூரியதேவன் (வீணாள் படாது) வருகின்ற நாடோறும் வாராமனீங்கினும், வருதலொழியாத தேனருவியின்கண் மூன்று காலமும் மூழ்குதல் செய்து விபூதியை