| (இ - ள்.) மாறுபாட்டைச் செய்கின்ற கவலையாகிய கடல் தாழ்ந்துபோம்படி கண்டனன். விரைவாக எழுந்தனன். குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரின்கண்ணுள்ள நுண்ணிய பொடிகள் விளங்குகின்ற பரந்த மார்பானது மண்ணின்கட் படியத் தண்டத்தைப்போல மலர்போன்ற மெல்லிய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினன். வலமாகச் சுற்றிவந்தனன். சந்நிதியினின்று கை தலையிற்குவியத் தோத்திரஞ் செய்வா னாயினன். (வி - ம்.) உடல் கவலைக்கடறாழக் கண்டானென முடிக்க. உடலுகின்ற கவலை யென்க. உடலல் - விரோதித்தல். தான் : அசை. என : உவமவுருபு. (34) | | எண்ணாதிகழ் தக்கன்மக மியற்றக்குழு முற்ற | | | விண்ணோருடல் சிதறுந்தனி வீரன்றனை யிகலி | | | மண்ணாழ்தர விழிகங்கைம டுத்துத்திறல் சிந்தும் | | | தண்ணார்மதி மிலைசெஞ்சடைத் தந்தாயடி போற்றி. |
(இ - ள்.) இறைவனை மதியாது இகழ்ந்த தக்கன் யாகத்தைச் செய்ய ஆங்குக் கூடிய விண்டு முதலிய தேவர்களுடல் கெடும்படி வீசிய வீரபத்திரக் கடவுளை, பூமியிடங் குழியும்வண்ணம் மாறுபட்டு இறங்குகின்ற கங்கையினை யுட்கொண்டு அக்கங்கையின் வலியினைக் கெடுக்கும் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை யணிந்த சடையினிடத்தினின்றும் உண்டாக்கியவரே! தேவரீர் திருவடி காப்பதாக. (வி - ம்.) இகலியிழி கங்கை யென்க. சிந்தும் என்னும் பெயரெச்சமும் மிலையென்ற வினைத்தொகையும் சடையென்னும் பெயருடன் றனித்தனி சென்றியைந்தது. வீரனைச் சடையிற் றந்தவனே யெனக் கூட்டுக. வீரனைச் சடையிற்றருதல் மாயூரப் புராணத்திற் காண்க. போற்றி - பாதுகாப்பதாக : வியங்கோள். இதனை, | | நோக்கவே தளிர்த்து நோக்கா திமைப்பினு நுணுகு நல்லார் | | | பூக்கம ழமளிச் சேக்கும் புதுமண வாள னார்தா | | | நீப்பிலார் நெஞ்சினுள்ளா ராதலா னினைத்தல் செய்யேன் | | | போக்குவல் பொழுதுந் தாந்தம் பொன்னடி போற்றி யென்றாள். |
என்னும் சிந்தாமணி (கனகமாலை - 324) செய்யுளானு மதனுரையானு முணர்க. இக்கவி முதல் நாற்பத்தொன்றாவது கவிவரை இறைவன் நிக்கிரக முறையும் அனுக்கிரக முறையுங் கூறுவா ராயினார். (35) | | கழைவார்சிலை குழையக்கடி மலர்வாளிக ணிமிர | | | விழைபோர்புரி மதவேளுரு விளியத்தழல் வெந்தீ | | | உழைநேர்விழி யுமையாள்கர மொளிர்கண்ணினை கதுவத் | | | தழைபேரிரு ளிரிகண்ணுமிழ் தலைவாவடி போற்றி. |
(இ - ள்.) கரும்பாகிய நீண்ட வில்வளைய, வாசனை பொருந்திய பூவம்புகள் நிமிர்ந்துசெல்ல, விரும்பிய போரைச் செய்கின்ற மன்மதன் வடிவங்கெடத் தகிக்கின்ற கொடிய தீயினை, மானையொத்த மருண்ட |