| பார்வையினையுடைய உமையம்மையார் திருக்கரங்கள் ஒளிர்கின்ற இரண்டு கண்களையும் புதைத்தபோது உண்டாகிய பெரிய இருளைக் கெடுக்கவிழித்த நுதற்கண்ணினின்றுங் கொட்டிய தலைவரே திருவடிகள் எனைக் காக்க. (வி - ம்.) உருவம் விளியும்படி அழலுகின்ற வெந்தீயைக் கண்ணினின்று முமிழ்ந்த தலைவாவென முடிக்க. கதுவலாற் றழைத்த விருளென்க. கழை - கரும்பு. நிமிர - நிமிர்ந்து செல்ல. நேர் - உவமவுருபு. கண்ணால் இருளை யோட்டல் அநுக்கிரகம். மதனை யெரித்தல் நிக்கிரகம். (36) | | இன்னற்கட னடுவட்படி யெளியேமுறை கேளா | | | மன்னிக்கிள ரின்பக்கடல் வதிவித்தருள் செவியை | | | மின்னிக்கிளர் வன்னித்தலை வெதிர்பட்டிற வுலகம் | | | முன்னிக்கிள ருழைவாய்க்கருண் முதல்வாவடி போற்றி. |
(இ - ள்.) துன்பமாகிய கடலின் நடுவே மூழ்குகின்ற எளியேங்களுடைய முறைப்பாட்டைக் கேட்டு நிலைபெற்று விளங்கும் இன்பமாகிய கடலினைத் தங்கச் செய்வித்த திருச்செவியினை, ஒளிர்ந்து விளங்குகின்ற யாகாக்கினியினின்றும் உலகம் செவிடுபடும் வண்ணம் முற்பட்டுத் தோன்றிய மானின் வாயினின்றுண்டாகும் சத்தத்தினுக்குக் கொடுத்த முதல்வரே! தேவரீர் திருவடி காப்பதாக. (வி - ம்.) கேட்டு வதிவித்தருள் செவியை யென்க. அச்செவியினை மானினது சத்தத்திற்குக் கொடுத்த முதல்வாவென வினை முடிவு செய்க. யாகத்தினின்று முண்டாகிய மான் உலகஞ் செவிடுபடும் வண்ணம் ஒலி செய்துவர, அதனைக் கண்ட யாவரும் இறைவனை யாது செய்யுமோவென மறுக்கங்கொள்ள அம்மானினைப் பிடித்து அதன் ஒலியைத் திருச்செவியிலேற்றனரென்க. இதனை "பண்ணுலா மிருவ ரிசை கொணின் செவியிற் பாணிமா னொலியுமேற் றிலையோ" என்னுஞ் சோணசைல மாலைச் செய்யுளானறிக. இனியொருசாரார், வன்னித்தலை வெதிர்பட்டிற உழைவாய்க் கருளென்பதற்கு உலகமான மகாசங்கார காலத்துளதாகிய ஊழித்தீயினால் நடுங்கியசைய, அக்காலத்துளதாகிய உழையென்னு மொருவகைப் பண்ணினுக்கருளிய செவியெனப் பொருள் கூறுவர். வெதிர் - செவிடு ; இதனை "வெதிரென்ப செவிடுமூங்கில்" என்னும் நிகண்டானறிக. வாய் : ஆகுபெயர். செவியால் முறை கேட்டின்பளித்தலால் அனுக்கிரகமும் உழையின் சத்தங்கேட்டலால் நிக்கிரகமுங் கூறினார். (37) | | அழல்போலுயிர் முழுதுஞ்சுடு மஞராணவ மொருவக் | | | குழல்வாய்மொழி யுமைகாணமு கிழ்க்குங்குறு நகையால் | | | உழலாவுல கொருமூன்றினு முறையும்புர மூன்றும் | | | தழல்வாய்விழ மறநல்கிய தந்தாயடி போற்றி. |
(இ - ள்.) அக்கினியைப்போல உயிர் முழுவதையும் வருத்துகின்ற அறியாமையே வடிவமாகிய ஆணவமலம் நீங்கக் குழல் வாய்மொழி யென்னும் திருப்பெயரினையுடைய உமையம்மை காணும் பொருட்டுத் தோன்றும் புன்சிரிப்பினாலே, ஒப்பற்ற சுவர்க்க மத்திய பாதலமென்னும் |