| மூன்றுலகத்தினும் சுழன்று தங்கும் இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய மூன்று ஊர்களையும் அக்கினியினிடத்து வீழ வீரத்தை நல்கிய தந்தை யாரே தேவரீர் திருவடியே பாதுகாப்பதாக. (வி - ம்.) சுடும் ஆணவம் அஞர் ஆணவம் எனக் கூட்டுக. ஒருவுதல் காரணமாக உமைகாண முகிழ்க்கும் நகையென்க. நீங்கத் தீவாய்ப் பட்ட வீரத்தை நல்கிய தந்தையென்க. அஞர் - அறியாமை, "அஞரறி விலரே துக்க"மென்னும் நிகண்டானறிக. உழலா - உழன்று. உலகொரு மூன்றினுமுறையும் புரமெனக் கூட்டுக. இச்செய்யுளின் கருத்தினை "புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர் பூங்கணை மதனுமுன் பெறுநின், சிரித்தவெண் ணகையும் நுதல்விழி நோக்கும் சிறியனே னிருண்மலம் பெறுமோ" எனும் சோணசைலமாலைச் செய்யுளொத் திருத்தல் காண்க. ஆணவ நீங்கல் அனுக்கிரகமும், புரமெரித்தல் நிக்கிரகமாகவும் கூறினார். (38) | | மருளாதுனை யறியும்வகை மாலாதியெல் லேமும் | | | ஒருவாதுணர் மறையாகம முதவுந்திரு வாயால் | | | தெருளாதுல கேழும்பொடி செய்யும்வளை யாளி | | | வெருளார்தர வுயிருண்டருள் விமலாவடி போற்றி. |
(இ - ள்.) மயக்கமடையாது தேவரீர் உண்மை நிலையினையறியும் வண்ணம் விண்டு முதலாய யாங்களெல்லேமும், நீங்காமலுணரத்தக்க வேதங்களையும், ஆகமங்களையும் உபதேசித்தருளிய திருவாயினால் தெளியாமல் ஏழுலகத்தினையும் பொடியாகச் செய்யும் பாஞ்ச சன்னிய மென்னுஞ் சங்கினையுடைய நரசிங்கம் அச்சமடைய உயிரைக் குடித்தருளிய மலமற்றவரே! தேவரீர் திருவடியே காப்பதாக. (வி - ம்.) எல்லோமு முணர்கின்ற மறையாகமங்களை யுதவிய வாயால் நரசிங்கத்தி னுயிரையுண்டருளிய விமலனென்க. வளையை யுடைய யாளியென்ற குறிப்பால் நரசிங்கமென்பது பெற்றாம். வளை - சங்கம்; சக்கரமெனினுமாம். வாயினாலுண்டல் - எண்காற்புள் வடிவாய்ச் சென்றுயிர்குடித்தல். வெருள் - அச்சம். மறையாகம மருளுதல் அனுக்கிரகமாகவும் உயிர்குடித்தல் நிக்கிரகமாகவும் கூறினார். (39) | | இரந்தாருல கோரேழினு மிவரேயிறை யென்ன | | | வரந்தானனி யெளிவந்துவ ழங்குங்கர மலரின் | | | உரந்தாவிய வளியேன்சிர மொன்றொய்யென வாங்கிப் | | | புரந்தானுடல் சூலத்திடு புனிதாவடி போற்றி. |
(இ - ள்.) இல்லங்கடோறுஞ் சென்றிரந்தவர்களை ஒப்பற்ற ஏழுலகத்தின்கண்ணும் இவர்களே தலைவர்களென்று சொல்லும்வண்ணம் வரத்தை மிகவும் எளிதாக வெழுந்தருளிக் கொடுக்குங் கரமலரால் அறிவு நீங்கிய எளியேனுடைய சிரமொன்றைத் திருக்கரத்தால் வாங்கியவரே! உலகத்தைக் காக்கின்றவனாகிய விண்டுவினுடலைச் சூலத்திட்ட பரிசுத்தமானவரே! தேவரீர் திருவடி பாதுகாப்பதாக. (வி - ம்.) இரந்தாரை உலகேழிற்கு மிவரேயிறைவரென்ன வழங்குங் கரமலரெனக் கூட்டுக. உரம் - அறிவு. தாவிய - நீங்கிய. வாங்கி - |