பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்289

பெயர். இதனை "தோற்றிய திதியே யொடுங்கி" என்றாற்போலக் கொள்க; இஃது அண்மைவிளி. புரந்தானுடலைச் சூலத்திட்ட கதை காஞ்சிப்புராணம் வயிரவீச்சுரப்படலத்திற் காண்க. இறையென்ன வழங்குதல் அனுக்கிரகமாகவும், சூலத்திடுதல் நிக்கிரகமாகவும் கூறினார்.

(40)

 முத்திப்பத மொருமூன்றொடு முழுதுங்கழு திரதம்
 செத்துப்பணி யடியார்சிரஞ் சேர்த்தின்பருள் பாதத்
 தெத்திக்கினும் விரையாக்கலி யிவர்வித்தம ரியமன்
 மைத்துத்திணி யுடல்பொன்றிய வரதாவடி போற்றி.

(இ - ள்.) ஒப்பற்ற பதமுத்தி மூன்றினோடு எல்லாவற்றையும் கானல் நீர்போலத் (தோன்றல் மாத்திரையே நித்தியப் பொருள்களல்ல வென்று) அறிந்து தன்னை வணங்குகின்ற (சாயுச்சிய பதவியை விரும்புகின்ற) அடியார்களின் தலையிலே சேர்த்துத் (திருவடி தீட்சை செய்து) வீட்டின்பத்தினைக் கொடுக்கின்ற பாதத்தால் எல்லாத் திக்குகளினும் ஆணையைச் செலுத்துவிக்கின்ற இயமனது கறுத்துத்திணிந்த உடலைப் பொன்றுவித்த மேலானவரே! தேவரீர் திருவடி பாதுகாப்பதாக.

(வி - ம்.) பதமுத்தியொரு மூன்றெனக் கூட்டுக. முத்திப்பத மூன்றாவன : சாலோகம், சாமீபம், சாரூப்பிய மென்க. இவை அவ்வக் காலாந்தரங்களி னழிதலின். "கழுதிரதஞ்செத்" தென்றார். கழுதிரதம் - கானற்சலம். செத்து - அறிந்து. இதனைச் "செத்து நிற்றியா" லென இப்புராணத்தின் வருவதானும். "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென" எனவரும் ஐங்குறு நூற்றானுமறிக. விரையாக்கலி - மூவுலகினுஞ் செல்லுமாணை; இதனை "விரையாக்கலியெனுமாணையும்" எனவரும் பதினொன்றாந்திருமுறை. (கோயினான் மணிமாலை 4-வது) ஆசிரியப்பா வானுணர்க. மைத்து - கருத்து. பொன்றிய - பொன்றுவித்த. திரு வைத்தல் அனுக்கிரகமாகவும் இயமனை யுதைத்தல் - நிக்கிரகமாகவும் கொள்க.

(41)

 அருள்செய்பவன் புரிதண்டமு மருளேயெனு முண்மைத்
 தெருளொன்றுமு ளத்தானருள் செயவந்தருண் முருகன்
 வெருளொன்றிய புரிதண்டமு மருளாகிய மெய்ம்மைப்
 பொருளொன்றிய வயனின்னன புகலுந்துதி கேளா.

(இ - ள்.) யாவர்க்குமருளினைச் செய்பவனாகிய தலைவன் ஆன்மாக்களுக்குச் செய்யுந் தண்டமும் அவ்வான்மாக்கண்மாட்டுக்கொண்ட அருளேயாகுமென்னு முண்மையோடு கூடிய தெளிவு பொருந்திய வுள்ளத்தினையுடைய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருள (தேவர் முதலியோர் துன்பினைநீக்கத்) திருவவதாரஞ் செய்த முருகப்பெருமான் மயக்க மடைய (என்மாட்டுப்) புரிந்த தண்டனையும் அருளாகிய மெய்ம்மைப் பொருளேயாகுமென்றுடம்பட்ட பிரமன் இத்தன்மையனவாகக் கூறுந் துதிகளைக் கேளா.

(வி - ம்.) உளத்தானருள் செயவந்த முருகனென்க. உளத்தான் - ஈண்டுச் சிவபெருமான். வெருள் - மயக்கம். ஒன்றிய - உடம்பட்ட, இச்செய்யுளுக்குப் பிறவாறு முரைப்ப.

(42)