| | எற்றுக்கிவ ணுற்றுத்தவ மினிதாற்றினை யென்னாக் | | | கற்றைச்சடை முடியான்கரு ணையினோடருள் செயலும் | | | வற்றிக்கவி னழிமேனியன் மழைகண்டெழு மயிலின் | | | முற்றக்கிள ருவகைக்கடன் முழுகுற்றெதிர் மொழிவான். |
(இ - ள்.) இவ்விடத்திற் பொருந்திய எப்பயனடைதற்குத் தவத்தினை இனிதாகச் செய்தனையென்று கூட்டமாகிய சடைமுடியையுடைய சிவபெருமான் கருணையோடு கேட்க, வற்றியழகொழிந்த உடம்பினை யுடைய பிரமன் மேகத்தினைக் கண்டெழுகின்ற மயிலைப்போல மிக விளங்குகின்ற மகிழ்ச்சியாகிய கடலின்கண் மூழ்குதலைச் செய்து விடை கூறுவான். இன் : ஐந்தாவ தொப்புப் பொருள். (43) | | தவற்றிற்கதி நடைகண்டுத ருக்குக்கடன் முழுதும் | | | சுவற்றிக்கொடு நரகுந்துணை யாகாவிட ரேய்த்துக் | | | கவற்றிச்சிறை யிடுவித்தருள் கந்தப்பெரு மான்செய் | | | இவற்றுத்தொழில் யான்செய்கதி லென்றானெதிர் நின்றான். |
(இ - ள்.) குற்றம் புரிதலிலெழுந்த வெளியேன் ஒழுக்கத்தினை யறிந்து எனது செருக்காகிய கடல் முழுவதையும் வற்றச்செய்து கொடுமை பொருந்திய நரகமும் ஒப்பாகாத துன்பத்தினைச் சேர்த்து வருந்திச் சிறையின்கண் என்னையிடுவித்த முருகப்பெருமான் செய்தருளிய ஆசையோடு கூடிய படைப்புத் தொழிலினை யான் செய்தலில் விருப்புடையேன் என்று கூறினவனாய் எதிரே நின்றனன். (வி - ம்.) தவறு - குற்றம். கதித்த - எழுகின்ற. நடை - ஒழுக்கம். கண்டு - அறிந்து. சுவற்றி - கெடுத்து. துணை - ஒப்பு. இவற்றுத் தொழில் - ஆசைத்தொழில்; படைப்புத்தொழில். தில் : விருப்பின்கண் வந்த இடைச்சொல், இதனை "அமிழ்துபொதி செந்நா வஞ்ச நிவந்த வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி, அரிவையைப் பெறுகதில் லம்ம யானே" என்னுங் குறுந்தொகைச் (14) செய்யுளானறிக. (44) | | அற்றேனின தார்வங்கம ழலரோயிது கேண்மோ | | | செற்றார்படை செற்றித்தெறு ஞாட்பிற்றிர ணோக்கிப் | | | பற்றாதென மற்றைப்படை பணிசெய்திட நிற்கும் | | | முற்றாரழல் வேலானல தருளன்முடி யாதால். |
(இ - ள்.) வாசனை வீசுகின்ற தாமரைமலரின் கண்ணுள்ள பிரமனே! நின்னாசை யத்தன்மைத்தாயின் இதனைக் கேட்பாயாக. நெருங்கிப் (பகைவர்களைக்) கொல்கின்ற போர்க்களத்தின்கண் பகைவர்கள் ஆயுதக்கூட்டங்கள் நோக்கி (இவ்வேற்படையின் முன்னிற்க நமக்கு வன்மை) போதாதென்று தொண்டினைச் செய்ய வாளாநிற்கும் நிறைந்த அக்கினி பொருந்திய வேற்படையையுடைய முருகனையல்லாமல் (இப்படைத்தற் றொழிலினை நினக்கு) அருளுதல் வேறொருவரான் முடியாது. (வி - ம்.) செற்றித்தெறு ஞாட்பில் செற்றார் படைத்திரணோக்கிப் பற்றாதென அப்படை பணிசெய்ய நிற்கும் வேலென வினை முடிவு |