பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்291

செய்க. மோ - முன்னிலையசை. செற்றார் - பகைவர். ஞாட்பு - போர். முற்று - நிறைந்த.

(45)

 துறைமுற்றிய மறையாகம மங்கந்தொகு கலைகள்
 இறைமுற்றிய விறையோனுல கெல்லாம்பணி குரவன்
 நறைமுற்றிய விதழித்தொடை நாமுந்தொழு மாசான்
 பொறைமுற்றிய வவன்வார்கழல் புகலேபுக லாமே.

(இ - ள்.) பொருட்குறைகள் முற்றப்பெற்ற வேதங்களும், ஆகமங்களும் வேதாகமங்களும் கூடிய ஏனைய சாத்திரங்களும் இறைமைத் தன்மை முற்றுப்பெற்ற தலைவனும், உலகத்தி லுள்ளவர்களெல்லாம் வணங்கத்தகுந்த பரமாசாரியனும் தேன் பொருந்திய கொன்றை மாலையை யணிந்த நாமும் வணங்கத்தகுந்த ஆசானுமாகிய பொறுமை நிறைந்த அம் முருகக் கடவுளின் நீண்ட பாதங்களிடத்துச் செல்லுதலே சரணாகும்.

(வி - ம்.) துறைமுற்றிய - பொருட்டுறை முற்றுப்பெற்ற. அங்கம் - வேதாங்கம். இறைமுற்றிய - இறைமைத் தன்மையடைந்த. புகல் - செல்லுதல்; சரண்.

(46)

 எய்யாந்தவ றுடையார்க்கரு ளீயுந்திற நோற்பின்
 கையாந்தவ றொருவிக்களி யருள்வாங்கழல் போற்றி
 மெய்யாந்தவ முழந்தாய்பிழை வீத்தாய்நம தருளால்
 மையாந்தநின் விழைவுய்த்தருள் வான்பாலுறல் பெற்றாய்.

(இ - ள்.) குற்றமுடையவர்களுக்கு (அக்குற்றத்தை நீக்கி) அருள் செய்யும் வகையிலிளையாம். அவர்கள் (அக்குற்றம் நீங்கத்) தவஞ்செய்யின் வெறுத்தல் செய்யேம். அவர் குற்றத்தினை நீக்கிக் களிப்பினைத் தருவோமாகிய எம் பாதங்களைத் துதித்து உண்மையாகிய தவத்தினை வருந்திச் செய்தாய். நின் குற்றங்களை நீக்கினாய், மருளினால் மயங்கிய நினது விருப்பத்தை முற்றுறச் செய்தருள்பவனாகிய முருகனிடத்தும் செல்லுந் தன்மையை (எம்மாற்) பெற்றாய்.

(வி - ம்.) திறத்தில் இளையா மென்க. எய்யாம் - இளையாம். நோற்பிற் கையாம் - தவஞ்செய்யின் வெறுக்கமாட்டோம். எம்மருளால் நின் விழைவைக் கொடுத்தருளும் முருகனிடத்தும் செல்லுந் தன்மையைப் பெற்றாயென முடிக்க. உம்மை விகாரத்தாற் றொக்கது. மையாந்த - மயங்கிய. இதனை "மலர்காணின் மையாத்தி நெஞ்சே" என்னுந் திருக்குறளடியா ணுணர்க.

(47)

 இனியன்னவ னருளுக்கொரு வைப்பாயில குவையால்
 துனிவின்றுயர் தவமாற்றிய சூழென்றனன் கேட்டான்
 புனிதன்முக மெதிர்நோக்குபு புலவர்க்கமிழ் தன்னான்
 நனிவந்தெளி தருளுந்தல நவிலாயென நவில்வான்.

(இ - ள்.) இனிமேல் அத்தன்மையை யுடைய முருகனது கருணைக்கு இடமாக விளங்குவாய். துன்பமின்றி யுயர்ந்த தவத்தைச்