| செய்ய முயல்வாயென்றனன். (இறைவன் றிருவாய்மலர்ந்தருளி யதனைக்) கேட்டுத் தூய்மையுடையவனாகிய சிவபெருமான் றிருமுகத்தை நோக்கித் தேவர்கட் கமுதையொத்த முருகப்பெருமான் மிக எளிதினெழுந்தருளி அருள்செய்யுந் தலத்தினைத் திருவாய்மலர்ந்தருள்வான். (வி - ம்.) வைப்பு - இடம். ஆல் - அசை. ஆற்றிய - ஆற்ற கேட்டான் : முற்றெச்சம். புலவர் - தேவர். அமிழ்தன்னவன் : முருகன். முருகனைக் குறித்துத் தவமாற்றச் சூழ்வாயென்றனன். சூழ்க : வியங்கோ ளீறுகெட்டது. (48) | | குருதித்தசை மிசையுங்குடர் மாலைத்தலை வேலான் | | | சுருதித்தலை மொழியின்பொரு ளெம்மைத்துளக் குறுத்த | | | கருதிக்கதி யெவரும்புகு கணிகாசல முளதவ் | | | வெர்ருதிக்கினு நிகரில்லதி னுறைகென்றும றைந்தான். |
(இ - ள்.) செந்நீரோடுகூடிய நிணத்தை யுண்ணுகின்ற குடரை மாலையாகவுடைய வேற்படையையுடைய முருகன் வேதங்களின் முடியின்கண்ணுள்ள பிரணவமென்னு மொழியின் பொருளை எமக்கு விளக்குதலைச் செய்த யாவரும் தியானித்தலால் மேற்கதியினிடத்துச் செல்லுதற் கேதுவாகிய கணிகாசல மென்னுந் திருப்பதியுள்ளது. அத்தலம் ஒரு திசையினிடத்தும் தனக்கு ஒப்பில்லாததாகும். அத்திருப்பதியின் கட் டங்குவாயென்று திருவாய்மலர்ந்தருளித் திருவுருக்கரந்தனன். (வி - ம்.) முருகன் எமக்குப் பிரணவப் பொருளை விளக்கிய கணிகாசல மெனவும் புகுங்கணிகாசல மெனவுங் கூட்டுக. அது என்னுஞ் சுட்டுப்பெயரீறு கெட்டு நின்றது. (49) | | சேட்டாரண மறியான்மறை சிவலிங்கம்வ ணங்கித் | | | தீட்டாமொழி யறிவான்றிகழ் மகிழ்வோடுமெ ழுந்தான் | | | தோட்டாரணி யஞ்சூழ்பதி தொழுதான்விடை கொண்டான் | | | கூட்டார்கிளி தமிழ்தேர்தரு கூடற்பதி சார்ந்தான். |
(இ - ள்.) பெருமை பொருந்திய வேதங்களும் அறியாதவனாகிய சிவபெருமான் திருவுருக் கரந்தருளிய குமாரலிங்கத்தினை வணங்கி எழுதா மொழியாகிய வேதத்தினை யறிவானாகிய பிரமன் மகிழ்ச்சியோடு மெழுந்து பூவிதழ் பொருந்திய வனஞ்சூழ்ந்த குற்றாலத்தினைத் தொழுது விடைபெற்றுக் கூட்டின்கட் பொருந்திய கிள்ளைகள் தமிழினை யாராய்கின்ற கூடற்பதியினைச் சேர்ந்தான். (வி - ம்.) சேடு - பெருமை, இதனை "சேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமா ரோப்பும்" என்னுங் காஞ்சிப்புராணம் நாட்டுப் படலச் செய்யுளா னறிக. தீட்டாமொழி - எழுதாக்கிளவி. தோடு - இதழ். (50) | | எட்டெட்டருள் விளையாடல்செ யிறைவன்கழன் மலரின் | | | மட்டட்டிய குழலாளொடு வணங்கிப்புற னேகி |
|