பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்293

 மொட்டொட்டிள முலைபங்கினன் முருகார்மலர்க் குறையூர்
 அட்டிட்டசி ராப்பள்ளியை யடைந்தான்றொழு தகன்றான்.

(இ - ள்.) தேனிறைந்த கூந்தலையுடைய தடாதகைப் பிராட்டியாரோடு அருளால் அறுபத்துநான்கு திருவிளையாடல் செய்த இறைவனுடைய பாதத்தை வணங்கிப் புறத்தேசென்று கோங்கமுகையை யொத்த முற்றாமுலையுமையை யொருபங்குடைய சிவபெருமான் வாசனை பொருந்திய மலருக்காக உறையூரை யழித்த சிராப்பள்ளியை அடைந்தவனாகித் தொழுது நீங்கினான்.

(வி - ம்.) மட்டு - தேன். அட்டிய - நிறைந்த. கடவுளானவர் மலருக்காக உறையூரை யழித்த சிராப்பள்ளி யென்க. சாரமாமுனிவர் வைத்த நந்தனவனத்தின் பொருட்டு மண்மாரி பெய்வித்த கதையையுட் கொண்டு "முருகார்மலர்க் குறையூ ரட்டிட்ட சிராப்பள்ளி" என்றார். இக்கதையினைச் செவ்வந்திப் புராணத்தா னறிக. ஒட்டு - உவமச் சொல். இதனை "தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே" என்னுந் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தா னறிக. அட்டிட்ட -
அழித்த.

(51)

 எண்ணத்துய ரியமாதவ ரீண்டும்புலி யூர்போய்
 விண்ணத்துய ரியகோபுர மேகம்பர னுருவின்
 வண்ணத்துய ரியதோலி்ன்வ யங்காலய மெய்திக்
 கண்ணத்துய ரியலாதறு கதிர்மன்றுப ணிந்தான்.

(இ - ள்.) எண்ணங்களா லுயர்ந்த பெரிய தவத்தினையுடையார் பொருந்தும் புலியூரின்கட் சென்று விண்ணினிடத் துயர்ந்த கோபுரத்தினிடத்துத் தங்கிய மேகமானது இறைவன் றிருமேனியின்கண் அழகினா லுயர்ந்த யானை யுரியைப்போல விளங்குகின்ற திருக்கோவிலையடைந்து கருதத் துன்பமானது பொருந்தாது நீங்குகின்ற ஒளியையுடைய பொன் னம்பலத்தை வணங்கினான்.

(வி - ம்.) கோபுரத்துத் தாங்கிய மேகம் இறைவன் றிருமேனியிலுள்ள யானையுரிபோல் விளங்குமாலய மென்க. வண்ணம் - அழகு. இதனை "வண்ணமேர் சந்தம் பண்பாம்" என்னும் நிகண்டா னறிக. அத்துக்கள் : சாரியை. கண்ண - நினைக்க. இயலாது - பொருந்தாது.

(52)

 ஆங்குப்புற விடைகொண்டன னன்னத்திரள் சேக்கும்
 பூங்கட்கம லக்குப்பைகள் பொழிதேன்மணம் வீசத்
 தேங்கும்புன லெழுவாளைக டெங்கம்பழஞ் சிந்தும்
 வீங்கும்புகழ் திரைபோர்த்தவி யன்காஞ்சிய டுத்தான்.

(இ - ள்.) அவ்விடத்தினின்றும் புறவிடை கொண்டு அன்னக் கூட்டங்கள் தங்கும் தேனோடுகூடிய மலர்களையுடைய தாமரைக் காடுகள் சொரிகின்ற தேன் வாசனையை வீசாநிற்க, நிறைந்த நீரிநிலை களிலுள்ள வாளைமீன்கள் தெங்கம்பழத்தினைச் சிதறுகின்ற மிக்க புகழானது திக்குக்களை மூடிய பெரிய காஞ்சி
மாநகரையடுத்தான்.