| (வி - ம்.) புறவிடை - (மனம் இறைவன்பாற்றங்க) உடம்பு விடைபெற்றுச் சேறல். தெங்கம்பழம் - முற்றின தேங்காய். இதனைக் "காய்மாண்ட தெங்கின்பழம் வீழக்கமுகி னெற்றி" என்னும் சிந்தாமணி (நாமக. 2) செய்யுளடியா னுணர்க. (53) | | உயங்கும்பவ மோரேழினு முறுவல்வினை நீவித் | | | தயங்கும்பர போகந்தரு தனிமாநிழ லென்றும் | | | வயங்குந்திரு வேகம்பனை வாழ்த்திப்பஃ றளியும் | | | நயங்கொண்டுப ணிந்தேத்தின னகரம்பிறக் கிட்டான். |
(இ - ள்.) வருந்துதற் கேதுவாகிய ஒப்பற்ற எழுவகைப் பிறப்பின்கண்ணும் பொருந்துகின்ற வலிய வினைகளைக் கெடுத்து (எக்காலமு மொரு பெற்றித்தாக) விளங்குகின்ற மேலாகிய வீட்டின்பத்தினை அருளுகின்ற ஒப்பற்ற மாமரத்தி னிழலின்கண்ணே என்றும் (நித்திய வாசஞ்செய்து) விளக்கமுறுகின்ற ஏகம்பநாதனை வணங்கி (ஆண்டுள்ள) பல கோவில்களையும் நன்மையை யுட்கொண்டு பணிந்து துதித்து அக்காஞ்சி நகரத்தைப் பின்னாகச் செய்தான். (வி - ம்.) உயங்குதல் - வருந்துதல். பவம் - பிறப்பு. பரபோகம் - மோட்சம். பிறக்கிட்டான் - பின்னாகச் செய்தான். தளி - கோயில். ஏத்தினன் - முற்றெச்சம். (54) | | எண்ணோங்கிய சீபூரண நகரெல்லைய கத்து | | | விண்ணோங்கிய புகழின்னகர் விளங்குங்குண திசையில் | | | தண்ணோங்கிய மதிதோய்வரை தனக்கோசனை யரையில் | | | பண்ணோங்கிய வாணிக்கொரு பதிநாவின னுற்றான். |
(இ - ள்.) ஆன்மாக்க ளெண்ணங்களையும் பெருமையாற் கடந் துயர்ச்சிபெற்ற தணிகைநக ரெல்லையினிடத்து ஆகாயத்தை யளாவிய புகழினையுடைய திருக்கோவில் விளங்குகின்ற கீழ்த்திசையில் குளிர்ச்சியா லுயர்ந்த சந்திரன் பொருந்தப்பெற்ற தணிகைமலைக்கு அரையோசனை தூரத்தின்கண் இசையாலுயர்ந்த சரசுவதிக் கொப்பற்ற இருப்பிடமாகிய நாவினையுடைய பிரமனடைந்தான். (வி - ம்.) நகர் - கோவில். குணதிசை - கீட்டிசை. பதி - இடம். (55) வேறு | | அண்டர் போற்று மடுக்கனேர் | | | கண்டு தாழ்ந்து கசிந்தனன் | | | பண்டை வேதம் பழிச்சினான் | | | மண்டு கட்புனல் வாக்கினான். |
(இ - ள்.) தேவர்களெல்லாம் துதிக்கும் தணிகைமலையினை நேரே பார்த்து வணங்கி மனங்கசிந்து பழைய வேதங்களை யோதினவனாகிய பிரமன் நிறைந்த கண்ணீரைக் கொட்டினான். |