| (வி - ம்.) அடுக்கல் - மலை. கசிந்தனன் - முற்றெச்சம். மண்டு - நிறைந்த. பழிச்சினான் வேதமுறைப்படி வழிபட்டான் எனலுமாம். (56) | | ஆண்டி லிங்க மமைத்தனன் | | | மாண்ட பூசை வயக்கினான் | | | பூண்ட வேடப் பொலிவொடு | | | மூண்ட ருந்தவ முற்றினான். |
(இ - ள்.) அவ்விடத்தே சிவக்குறியை நிறீஇ மாட்சிமைப்பட்ட பூசனையைச் செய்து தான் மேற்கொண்ட வேடத்தின் அழகுடன் முயன்று செய்தற்கரிய தவத்தினை யியற்றினான். (வி - ம்.) அமைத்தனன், வயக்கினான் என்பன முற்றெச்சங்கள் மூண்டு - முயன்று. (57) | | முதுமை மாதவர் மூசுதேன் | | | மதுவி ராந்தொடை வானவர் | | | பதும னோடு படர்ந்துசெல் | | | நுதுபு லத்தரு நோற்றனர். |
(இ - ள்.) முதிய பெரிய தவத்தினையுடைய முனிவரும், மொய்க்கின்ற வண்டுகளோடு தேன் பொருந்தப்பெற்ற தேவர்கள் பிரமனோடு தொடர்ந்து செல்கின்ற அவித்த ஐம்புலன்களை யுடையாருந் தவஞ் செய்தனர். (வி - ம்.) நுதுபுலத்தர் - அவித்த ஐம்புலன்களை யுடையார். நுதுத்தல் - அவித்தல். இதனை "நெய்யா லெரிநுதுப்போ மென்றற்றா" லெனும் திருக்குறளடியா னுணர்க. (58) | | விருத்த ராகிய மெய்த்தவர் | | | விருத்தந் தீர்தர மேவுமவ் | | | விருத்த வானகர் மேயதால் | | | விருத்த மாபுர மெய்ப்பெயர். |
(இ - ள்.) அறிவொழுக்கங்களின் முதிர்ந்தவராகிய உண்மைத் தவத்தினை யுடைய பெரியார்கள் தங்களுள்ளத்திற் றோன்றும் வேறு பாடுகள் நீங்கப் பொருந்தும் புதிய பெரியவந் நகரமானது விருத்தமா புரமென்னும் உண்மைப் பெயரினைப் பொருந்தியது. (வி - ம்.) விருத்தராகிய - அறிவொழுக்கங்களி னுயர்ந்தவராகிய விருத்தம் - வேறுபாடு. விருந்து : விகாரம். "விருத்தராகிய மெய்த்தவர், விருத்தந்தீர்தரமேவும் நகரென வுடம்பொடு புணர்த்திக் கூறியதே விருத்தபுரமென்னும் பெயர்க்குக் காரண மென்க. (59) | | பொற்ற மாதவம் போற்றியே | | | ஒற்றை யாண்டொழி வெய்தலும் |
|