| | வானாதி பூதங்கள் வயக்கி மாற்றும் | | | ஆனாத பேரறிவா மடல்வே லண்ணல் | | | கானாரு மலர்ப்பாதங் கசிந்து தாழ்ந்தங் | | | கூனாதி யொருக்கியுணர் வயத்த னானான். |
(இ - ள்.) ஆகாய முதலிய பூதங்களைப் படைத்து அழிக்கும் அமையாத மிக்க ஞானமே திருவுருவமாகிய வலிமை பொருந்திய வேற்படையையுடைய தலைவனாகிய முருகக்கடவுளின் தெய்வமணம் பொருந்திய மலர்போன்ற திருவடிகளைக் கசிவுற்று வணங்கி உடம்பு முதலியவற்றை வருத்தி அறிவே வடிவமாயினான். (வி - ம்.) வயக்கல் - ஈண்டுப் படைத்தல். மாற்றும் - அழிக்கும். பேரறிவு - முற்றறிவு. ஊன் - ஆகுபெயர். ஒருக்கி - வருத்தி; ஒடுக்கி. உணர்வயத்த னானான் - அறிவு வடிவமாயினான். (63) | | அன்றுபோய் வழிநாளங் கடுத்த கீழ்சார் | | | ஒன்றுநீர்ச் சுனைநோக்கி யுதனிற் றோய்ந்து | | | மன்றல்சூழ் சுனைத்தலையின் வைகி நாளும் | | | நன்றுமா தவமாற்று நடைமே தக்கான். |
(இ - ள்.) அற்றைநாள் கழியப் பிற்றைநாள் அவ்விடத்தை யடுத்த கீழ்ப்பாகத்துப் பொருந்திய நீர்நிறைந்த சுனையினைக் கண்டு அச்சுனையின்கண் மூழ்கி வாசனை பொருந்திய சுனையினிடத்துத் தங்கி ஒவ்வொருநாளும் நல்ல மாதவத்தினைச் செய்யும் ஒழுக்கத்தினால் மேன்மையடைந்தான். (வி - ம்.) உதனில் - அதனில். மன்றல் - வாசனை. இதனை "மன்றனாறு மதுமலர் வாளிகொண், டின்றெ னாருயி ரீருந்த கைமையான்" என்னும் நைடதச் செய்யுளடியானுணர்க. நடை - ஒழுக்கம், இதனை "நடைவழி யொழுக்கஞ் செல்வம்" எனும் நிகண்டானறிக. (64) | | மறைகதித்த வாறெழுத்தின் வண்மை நாடி | | | முறைகணித்து முருகனருள் வடிவ முற்றப் | | | பொறைகதித்த வுளத்தமைத்துப் பொறிக ளோப்பி | | | நிறைகதித்த மாதவத்தி னிகழுங்காலை. |
(இ - ள்.) வேதத்தில் (எல்லா மந்திரங்களினும்) உயர்வாகக் கூறிய ஆறக்கரத்தின் பொருள் வளப்பத்தினை யாராய்ந்து செபிக்க வேண்டிய முறைப்படி செபித்து முருகப்பெருமானது அருள்வடிவமாகிய திருவுரு முழுதும் பொறுமைதங்கிய உள்ளத்தின்கண் அமையச் செய்து ஐம்பொறிகளையும் (தத்தம் புலன்களிற் செல்லாமல்) ஓட்டிப் பூரணத் தன்மை தோன்றிய பெரிய தவத்தின் கண்ணே நிகழ்கின்ற காலத்தில். (வி - ம்.) கதித்தல் - உயர்தல். வண்மை - ஈண்டுப் பொருள் பனப்பம். கணித்தல் - உச்சரித்தல். பொறைகதித்த - ஈண்டுப் பொறுமை தங்கிய, நிறைகதித்த - பூரணத்தன்மை யெழுந்த. ஓப்பி - ஓட்டி. (65) |