கடவுள் வாழ்த்து சிவபெருமான் | உலகிரு ளுருவத் தொளிகளி னிரித்தாங் | | குறுபொரு ளெவற்றையுந் தெரித்துள் | | விலகிருண் முழுது மருள்கொடு துமித்து | | விராயொளிர் தன்னையுந் தன்னால் | | இலகுயிர் தனையுந் தெரித்தறி வுறுக்கும் | | இயல்பினெக் காலமும் பிறழா | | தலகிலற் புதக்கூத் துமையினைக் காட்டும் | | அடிகள்சே வடிகளைப் பணிவாம். |
(இ - ள்.) உலகின்கட் டங்கியுள்ள புறவிருளைத் தனது திருமேனியின் கண்ணுள்ள ஞாயிறு முதலிய வொளிகளானீக்கி, அவ்வுலகின்கண்ணுள்ள நிலையியற்பொருள் இயங்கியற்பொருள் எல்லாவற்றையுங் கண்ணுக்குப் புலப்படச் செய்து, ஆன்மாக்க ளகத்தேஅறிவு நீங்குதற்கேது வாயுள்ள ஆணவ விருள் முழுவதையும் அருளாகிய வொளிகொண்டு கெடுத்து, அவ் வான்மாக்களோடு கலந்து விளங்குகின்ற சிவமாகிய தன்னையும் தன்னால் விளங்குகின்ற ஆன்மாக்களையுந் தெரிவித்து, அவ்வான்மாக்களுக் கிவ்வாறு பெத்தமுத்தியிரண்டினும் அறிவுறுத் துபகரிக்கும் பெருங்கருணைத் தன்மையி னின்றும் எக்காலத்து மாறுபாடின்றி அளவிட முடியாத வியப்புடைய திருக்கூத்தினை உமையம்மையாருக்குக் காட்டியருளும் இறைவனுடைய செம்மையான பாதங்களை வணங்குவாம். (வி - ம்.) அற்புதக் கூத்து - பஞ்ச கிருத்தியம் நிகழற்கு ஏதுவாய சூக்கும நடனம்; ஆன்மாக்களதனைக் காண்டற்கறி, விச்சை, செயல்களினுரனின்மையான் "பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண்டாங்கு"1 அம்மையார் காண்டலின் அலகிலற்புதக் கூத்து மையினைக் காட்டு மென்றார். தன்னையுந் தன்னாலிலகுயிர் தனையுந் தெரித்தென்றதனால் விசாரமும், அருள்கொடுதுமித் தென்றதனால் மல நீக்கமும், அறிவுறுக்கு மியல்பினெக் காலமும் பிறழா தென்றதனால் அநுபூதியுங் கூறியவாறு காண்க. இறைவனுக்குக் கண்மூன்றும் முச் சுடராதலின் அவை உருவத் தொளிகளெனப்பட்டன; உமைக்கு; வேற்றுமை மயக்கம்; தெரித்து விவ்விகுதி தொக்குநின்றது. இலகுதல் - விளங்குதல்; பானு மதி உடுக்கள் முதலியன உருவத் தொளிகளென்பதைத் திருக்கண்புதைத்த 2கதையா லறிக. உருவத்தொளி, உருவத்தைப் புலப்படுத்தற் கேதுவாகிய வொளியெனினு மமையும். அத்து; அல்வழி வந்த சாரியை. (1) சிவசத்தி | சீரணி சிருக்கு மணிவடஞ் சங்கு | | திகிரிசூ லப்படை யிலைவேல் | | போரணி பாச மங்குசங் கழைவில் | | பூங்கணை வேறுவே றணியா |
1. | குமரகுருபரர், சிதம்பர மும் - 2. | 2. | சித்தியார், 1 - 2 - 14. |
|