பக்கம் எண் :

30தணிகைப் புராணம்

 "வள்ளி வாரிய குழியின் வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ்
  சுள்ளி வேலியி னீங்கித் துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து
  வெள்ளி வெண்டிரள் விசித்து நிலத்தொடு தறிபுடைத் தவைபோற்
  றுள்ளி வீழுய ரருவி வனகிரி தோன்றிய தவணே"

என்ற சிந்தாமணி கனகமாலையாரிலம்பகம் ஒன்பதாஞ் செய்யுளின் கருத்தும் ஒத்திருத்தல் காண்க.

(35)

 கொடிச்சி மார்விழிக் கூர்ங்கணை குளிப்பகா னவர்தோள்
 வடித்த வாங்கவர் வார்கணை குளிப்பமால் வேழந்
 தடித்த வேழத்தின் கோடுகள் குளிப்பபூந் தருக்கள்
 கடித்த பூந்தருக் கோடுகள் குளிப்பவான் கங்கை.

(இ - ள்.) குன்றத்தியர் விழிகளாகிய கூரிய அம்புகள் குன்றவாணர்கள் தோள்களின்கண் மூழ்குவன; அக்குன்றவாணர்களுடைய கூரிய நீண்ட வம்புகள் மதமயக்கத்தையுடைய யானையின்மேன் மூழ்குவன; பருத்த யானைகளின் கொம்புகள் பூக்களையுடைய மரங்களைக் குத்திக் குழிசெய்வன; வாசனையை யுடைய மலர்களையுடைய மரங்களின் கிளைகள் ஆகாய கங்கையின்கட் டோய்வனவாம்.

(வி - ம்.) தடித்த - பருத்த; கடித்த வாசனையையுடைய; கடி - வாசனை; ஆங்கு - அசை; இஃதொற்றை மணிமாலை யணி.

(36)

 விழிக்கு டைந்தமான் செவிகண்மெல் லியனல்லார் தடிந்தவ்
 வுழிக்க ஞற்றியாங் குயர்பணை கண்பொதி பாளை
 கழிக்கு மற்றவை மறையவெண் கதிர்மணி யுகுக்குங்
 கொழிக்கு நித்தில மறையமேற் கொட்டும்வண் டோரை.

(இ - ள்.) (குறிஞ்சி நிலத்தின்கணுள்ள) மெல்லிய இலக்கணமமைந்த பெண்கள் தங்கள் விழிக்குத் தோற்ற மான் கூட்டங்களின் செவிகளைக் குறைத்து அவ்விடத்தே நிறைத்தாற்போல உயர்ந்த மூங்கில்களானவை தம் கணுக்களைமூடிய மடல்களை நீக்கும்; அம்மடல்கள் மறையும் வண்ணம் வெள்ளிய ஒளியுடைய முத்தங்களைச் சொரியும், அங்ஙனஞ் சொரிந்த முத்தங்கள் மறையும் பொருட்டு அவைகளின்மீது அரிசியைக் கொட்டும்.

(வி - ம்.) தடிதல் - குறைத்தல். 'தடிந்தெழிலி' என்றதும் இப்பொருட்டாதல் காண்க. கஞற்றல் - நிறைத்தல்; கண் - வரை, கணு; தோரை - மூங்கிலரிசி; பணை கழிக்கும் உகுக்கும் கொட்டுமென வினை முடிவு செய்க; மூங்கிலின்பாளை மான் செவிபோலக் கழன்று விழுமென்பதனை "நுண்பொறி மான் செவிபோல வெதிர்முளை கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்றே" என்னும் 43
கலியானுணர்க.

(37)

 மழைத்த கார்முகி லகடுகீண் டெழுந்துவா னோங்குந்
 தழைத்த வேய்நுதிக் களிமயி லகவுவ சமர்க்கட்
 குழைத்த மாமரங் கீழ்ந்தவன் கோயின்முன் மணியின்
 இழைத்த கேதனத் திளமயி லகவலோ டியையும்.