(இ - ள்.) களிப்பினையுடைய மயில்களானவை ஈரித்த கரிய மேகத்தின் நடுவிடத்தைக் கிழித்தெழுந்து ஆகாயம்வரை யுயர்ந்த செழித்த மூங்கின் மரங்களின் நுதியினிடத்திருந்தாடுவன போரின்கட்டழைத்த (சூரபன்மாவாகிய) மாமரத்தைப் பிளந்தவனாகிய குமரநாயகனது திருக்கோயிலின் முன்னர் மணிகளழுத்திச் செய்யப்பெற்ற கொடிமரத்தில் இளமயிலாடுவதோடு ஒத்துத்தோன்றும். (வி - ம்.) மழை - குளிர்ச்சி; அகடு-நடுவிடம்; குழைத்த; தழைத்த; கேதனம் - கொடி; இஃதாகு பெயர்; இயையும் - ஒக்கும்; அகவல் - ஆடல்; 'அகவ லாடலொலிப் பேர்' என்னும் நிகண்டானறிக. சூரன் மாமரமானது வெளிப்படை. (38) | | இளகு காழகிற் சந்தனப் பொதும்பரெவ் விடனும் | | | வளகு மேய்ந்துசே வகங்கொளு மான்மத மொழுக்குங் | | | குளகு தேரிய வருடைமான் குப்புறு மடுக்கத் | | | தளகி னோடுபாட் டிரட்டுமா லளைதொறுங் குரால்கள். |
(இ - ள்.) யானைகள் தளிர்த்த வயிரத்தோடு கூடிய அகின்மரங்களும் சந்தன மரங்களுஞ் செறிந்த சோலைகளினிடமெங்கும் வளகென்னும் புதலையருந்தி மதத்தை யொழுக்காநிற்கும், இலையுணவைத் தேரவரையாடுகள் தாவுகின்ற அரைமலையின்கணுள்ள குகைகடோறும் கோட்டான்கள் தம் பெட்டைகளோடும் பாட்டினைப் பாடாநிற்கும். (வி - ம்.) இளகு - தளிர்த்த; காழ் - வயிரம்; காரகிலெனவும் பாடம்; வளகு - வளகென்னும்புதல்; இதனை 'புணர்நிலை வளகின் குளகமர்ந்துண்ட' என்னும் 43 கலிப்பாட்டானு முரையானு முணர்க. சேவகங் கொளுமான் - யானை; சேவகம் - யானை துயிலுமிடம்; குளகு - இலையுணவு; 'இலை நுகர் விலங்குணாவே குளகென வியம்பலாகும்' என்னு நிகண்டானறிக; தேரிய - தேர் செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; வருடைமான் - வரையாடு; "வருடைமான் குழவிய வனமலைநாட" என்னுங் கலியானுணர்க. குப்புறல் - தாவல்; அடுக்கம் - அரைமலை: "நடுக்கின்றி நிலீயரோவத்தை யடுக்கத்து" என்னும் புறநானூற்றடி யுரையா னுணர்க. அளகு - கூகைப்பெடை; "அயர்வுறுகோழி கூகையல்லாப் பெண்ணள கென்றோதார்" என்னும் நிகண்டானும், "கோழி கூகையா யிரண்டல்லவை யாயுங்காலை யளகென லமையா" என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானுமுணர்க. அளை - குகை; குரால் - கோட்டான்; ஆல் - அசை. (39) | | வணங்கு நுண்ணிடை மாதரார் வனமுலைக் கோட்டோ | | | டணங்கு போர்செய வளைந்தன போலடற் கரிக்கோ | | | டிணங்கு வேலிசூழ் குறிச்சியெங் கணுமினி தெழுந்த | | | கணங்கொள் வள்ளைகேட் டுறங்குவ கனிப்பொழிற் கிள்ளை. |
(இ - ள்.) துவளுகின்ற நுண்ணிய இடையினையுடைய வேடப் பெண்களின் அழகுபொருந்திய முலையாகிய கோடுகளோடு வருத்தத்தைத் தரத்தக்க போரினைச் செய்ய வளைந்தாற்போல கொலை குறித்தலையுடைய யானைக் கொம்புகள் பொருந்திய வேலியாகச் சூழ்ந்த |