அச் சிற்றூரினிடமெங்கும் இனிதாகவெழுந்த கூட்டங்கொண்ட உலக்கைப் பாட்டினைக் கேட்டுக் கனிகள் பொருந்திய சோலையினிடத்துள்ள கிளிகள் உறங்குவன. (வி - ம்.) கரிக்கோடு வளைந்தனபோல விளங்கும் வேலியென வியைக்க. வள்ளைப்பாட்டு - தலைவியுந் தோழியும் யானைக்கொம்பாலாகிய உலக்கையால் நெற் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு இதனைக் கலி. 41-ஆவது செய்யுளுரையா னுணர்க. கிளி குறிஞ்சிநிலக் கருப்பொருள். (40) | | உடுக்க வொள்ளிணர்த் தழைபல கொய்துமூழ் தினைகள் | | | மடுக்கும் புள்ளெறி கவண்கலான் வார்பணை பொதிர்த்தும் | | | இடுக்க ணேபுரி மாதரை யிற்செறிப் பாமென் | | | றடுக்கல் வேங்கைக ளெரியகைத் தெனவல ரூழ்க்கும். |
(இ - ள்.) அரைமலையின்கணுள்ள வேங்கைமரங்கள் உடையாக உடுக்கும் பொருட்டு, நிறம் பொருந்திய பூங்கொத்துக்களையுடைய பல இலைகளைப் பறித்தும் பதனழிந்த தினைகளை வாய்நிறைத்துண்ணும் பறவைகளை யெறிகின்ற கவணென்னுங் கருவியின்கணுள்ள கல்லால் நீண்ட கிளைகளைத் துளைத்தும் எஞ்ஞான்றுந் தமக்கு இன்னலைச் செய்கின்ற இவ் வேட்டுவப் பெண்களைப் புறத்தே செல்லாமல் இல்லின்கட் செறிப்போமென்று நெருப்பினை யறுத்துவிட்ட தென்று சொல்லும்படி மலரை யுதிர்க்கும். (வி - ம்.) புனத்தின்கண் வெட்டாது நிற்கும் வேங்கைமரங்கள் பூத்தவுடன் தினையறுத்தல் மரபு; தினைகொய்த பின்னர்த் தலைவியை இல்லின்கட் சேர்த்தல் முறைமையாம்; இதனை வேங்கைகள் செய்ததாகக் குறித்தலின் தற்குறிப்பேற்றம். ஊழ்தினை - பதனழிந்த தினை; பதனழிதல் - ஈண்டுத் தினைமுதிர்தல்; மடுத்தல் - வாய்நிறைத்தல், ஈண்டுக் கவர்தல்; பணை - கிளை; இற்செறித்தல் - மனையின்கட் சேர்த்தல்; பொதிர்த்தல் - துளைத்தல்; அகைத்தல் - அறுத்தல்; - 'அகைத்தல் வேதனை யொடித்த லறுத்திடலுயர்த்தலாமே' என்னும் நிகண்டா னறிக; ஊழ்க்கும் - உதிர்க்கும்; இற்செறிப்பா மென்றலரூழ்க்குங் கருத்தினை 'நங்குலத் தருவாழ்க்கையைக் கெடுத்து' என்னுங் காஞ்சிப்புராணச் செய்யுளானறிக. (41) | | உருமி னார்த்துடன் றெதிரெறு ழுழுவையோ டும்பல் | | | பொருத முற்றொழில் கனவலிற் பொருக்கென வெழுந்தங் | | | கருகு நின்றவொள் வீயிணர் வேங்கையை யலைக்கும் | | | மருவு வெஞ்சின மூண்டுழி வகுத்தறி யார்போல். |
(இ - ள்.) யானைகளானவை இடிபோல முழங்கிக் கோபித்து எதிர்த்த வலிய புலியுடனே நனவிற்செய்த போர்த்தொழில் வாசனாரூபமாய் மனத்தினிடத்துத் தங்கிக் கிடத்தலான் அதனைக் கனாவின் காண்டலால் கடுக விழித்தெழுந்து அவ்விடத்துத் தன் பக்கலினின்ற ஒள்ளிய பூங்கொத்துக்களையுடைய வேங்கைமரத்தை மிக்க கொடிய |