பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்33

கோபம் பொருந்திய காலத்துச் செய்வதின்னது தவிர்வதின்னதெனப் பாகுபாடு செய்துணராது நினைத்ததைச் செய்து முடிப்பார்போல அலைத்தலைச் செய்யும்.

(வி - ம்.) உருமின் ஐந்தாவது ஒப்புப்பொருட்டு; கனவல் - கனாக்காண்டல்; கனவு பின்வருதலால் பொருதமுற்றொழில் நனவை யுணர்த்திற்று; வீ - பூ ;

 "கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
  நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை
  நனவிற் றான்செய்தது மனத்த தாகலிற்
  கனவிற் கண்டு கதுமென வெரீஇப்
  புதுவ தாக மலர்ந்த வேங்கையை
  யதுவென வுணர்ந்தத னணிநல முருக்கிப்
  பேணா முன்பிற்றன் சினந் தணிந்து."

என்னுங் கலி. 49-ஆம் செய்யுளும் ஈண்டு நோக்கத்தக்கது; இது மயக்கவணி.

(42)

 வாய்வ தாகிய பொருளினை வல்விரைந் தன்னோ
 வாய்வ தாகில ராக்குவான் புகுந்தழிப் பார்போற்
 காய்வ தாகிய திறத்தினாற் கதழ்ந்துதா யிடத்து
 வீழ்வ தாக்கியுண் ணாதுபோ துவவிள வேங்கை.

(இ - ள்.) இளமை பொருந்திய வேங்கைக் குட்டிகள் ஐயோ ஊழான் இயல்பின் வந்துபொருந்துவதாகிய பொருளினை ஆக்கும் பொருட்டு முனைந்து ஆக்கக்கேடு முதலியவற்றிற்குரிய உபாயங்களான் ஆராய வேண்டுவதனை ஆராயாதவராகி மிக விரைந்து களைப்போலக் கொல்வதாகிய திறமொன்றனையே கருதியதனால் வேகங்கொண்டு பாய்ந்து இடப்பக்கத்து உயிர்நீத்து வீழும் வண்ணஞ்செய்து அதனை யுண்ணாது செல்வன.

(வி - ம்.) வாய்வதாகிய பொருள் - ஊழாற்றமக் கியல்பாக வந்தமையும் பொருள்; கதழ்ந்து - விரைந்து; தாய் - தாவி; - செய்தென் வாய்பாட்டு வினையெச்சம்; வேங்கைகள் ஒளிந்திருந்து பாய்ந்துகொன்று வீசிய மிருகம் இடப்பக்கத்து வீழின் உண்ணாது செல்லுமென்பதனை அகநானூற்றானும், "கடமா தொலைச்சிய, கானுறை வேங்கையிடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்" என்னும் நாலடிச் செய்யுளானு முணர்க. அன்னோ - இரக்கக் குறிப்பு.

(43)

 குருவி யோப்புதங் கவண்கலாற் குலைந்திறா லினத்தோ
 டுருவ வாசினி யுக்கன வசும்பின நிலத்து
 மரும லர்ப்பதம் வழுக்கிவீழ்ந் தினைவர்மா னனையார்
 ஒருபொ ருட்கிடர் செயினவை மறுகணத் துறாகொல்.

(இ - ள்.) (கண்டார் காதல் கோடற்குக் காரணமாகிய) மான்போலு நோக்கத்தினையுடைய அக் குறிஞ்சிநிலப் பெண்கள் (புனத்தின்கண் தினைக்குரலைக் கவர்கின்ற) குருவிகளை யோட்டுகின்ற தங்கள்