| | பூமுத லைந்தற் கீத்தல் புணர்த்தமை தெரிக்கு மாபோல் | | | தாமரை மலர்ந்து கற்பந் தளிர்த்துத்தே னுவின்கா தாகிக் | | | காமுற வலம்பு ரிந்து கதிர்மணி முகிழ்த்த செங்கை | | | நாமற வஞ்ச லென்னா வமைத்தரு ணயப்புத் தோன்ற. |
(இ - ள்.) கற்பகம், பதுமநிதி, சங்கநிதி, சிந்தாமணி, காமதேனு முதலிய வைந்தினுக்கும் கொடுக்குந் தொழிலை (கையாகியதாஞ்) சேர்த்த தன்மை தெரிவிக்குமாறுபோலத், தாமரை மலர்போல விரியப் பெற்று, கற்பகத் தளிரைப்போலத் தளிரைச் செய்து, பசுவின் காது போலாகி யாவரும் விரும்ப வலஞ்சுரித்த சங்கரேகையுடன் கூடி, ஒளி பொருந்திய மணிரேகையைத் தோற்றுவித்த சிவந்த திருக்கரம் அச்சமற வஞ்சற்கவென்று அமைத்தருளிய நயப்பானது தோன்றா நிற்க. (வி - ம்.) குமரன் றிருக்கரம் தாமரை மலர்போல விரிந்து கற்பகத் தளிர்போன்ற நிறமுற்று அபயஸ்தங் கொடுக்குங்காலத்துக் கோகர்ன வடிவமாகிச் சங்கரேகையும், மணிரேகையுந் தங்கப்பெற்றிருத்தலின் "தாமரை மலர்ந்து . . . . . . . . . .காமுற வலம்புரிந்து கதிர்மணி முகிழ்த்த செங்கை" யென்றார். ஈதல் : விகாரம். தெளிக்குமாறு : விகாரம். நாமம் : உரிச்சொல் ஈறு திரிந்தது. அமைத்தல் - அபயாஸ் தங் கொடுத்தல். நயப்பு - விருப்பு. (71) | | ஆறிரு கோடி வெய்யோ ரனைவரு மொருங்கு கூடி | | | வீறினும் பரிதி முன்னர் வெண்கதி ரெனமை யாக்கும் | | | பேறிருங் கிரணக் கற்றைப் பெருவிலைச் சிறுக லாழி | | | மாறிரி யடியா ருள்ள முழுவதும் வளைத்துக் கொள்ள. |
(இ - ள்.) பன்னிரண்டுகோடி சூரிய ரனைவரும் ஒருங்குசேர்ந்து (ஒளியான்) மிகினும், சூரியன் முன்னர்ச் சந்திரனொளி கெடல்போல ஒளியைக் கெடுக்கும்பெற்றி வாய்ந்த பெரிய கிரணக் கூட்டத்தையும் பெரிய விலையையுமுடைய சிறிய அரதனக்கற்கள் பதித்த மோதிரங்கள் மயக்கம் நீங்கிய அடியாருள்ள முழுவதையும் வளைத்துக்கொள்ள. (வி - ம்.) சூரியர் வீறினும் அவ்வனைவரும் மையாக்கும் படியான கிரண மென்க. ஆறிருகோடி - பன்னிருகோடி சூரியர். மையாக்கும் - கெடும். பேறு - பெற்றி. மால்திரி - மயக்கம் நீங்கிய. விரலையே யன்றி உள்ளத்தையும் வளைத்துக்கொள்ளு மென்பார். "மாறிரி யடியா ருள்ள முழுவதும் வளைத்துக்கொள்ள" வென்றார். (72) | | பிரமர்நா ரணர்பல் லோரைப் பெற்றெடுத் தவர்க்கு நல்க | | | வரமலி பாச மாழி வகுத்துவைத் திருப்ப தேய்க்கும் | | | உரமலி முன்கைச் சூழ்ந்த வொளிர்ந்தபொற் றொடரி னோடு | | | கிரணவொண் கடக மெங்குங் கேழொளி மயமாத் தேக்க. |
(இ - ள்.) பிரமர், நாரணர், பல்லோரை யீன்றெடுத்து அப்பிரமர் நாரணர்க்கு வழங்கும் மேன்மைபொருந்திய பாசமும், சக்கரமும் பிரித்துவைத்திருத்தலை யொக்கும், வலிமைபொருந்திய முன்கையிற் |