| சுற்றிய ஒளிர்கின்ற பொன்னாற் செய்த வீரசங்கிலியுடனே கிரணத் தோடு கூடிய ஒளிபொருந்திய கடகமென்னு மாபரணம் எவ்விடத்தும் ஒளி வடிவாக நிறைக்க. (வி - ம்.) பாசம் - பிரமன் கையில் வைத்திருக்கும் படை; இது சங்கிலி வடிவாகவுள்ளது. பொற்றொடர் - வீரசங்கிலி. கடகம் - காப்பு. கேழ் - ஒப்பு. தேக்க - நிறைக்க. (73) | | வரையரோ தோளன் றென்னும் வயிரவங் கதங்கண் முன்கைப் | | | புரைதபு கடக மிக்குப் பொலிபிர தாபங் காட்ட | | | நிரையிரா சதத்தின் மேலாய் நிகழுஞ்சாத் துவிகத் தாகும் | | | உரைதகு கீர்த்தி யும்ப ருற்றொளிர் முறைமை காட்ட. |
(இ - ள்.) முன் கைகளிடத்துக் குற்றம் நீங்கிய கடகங்கள் செவ்வொளி மிகுந்து விளங்காநின்ற (முருகனது) இராசத குணத்தா லுண்டாகிய பிரதாபத்தைக் காட்டாநிற்க, தோளன்று மலையென்று சொல்லும்படியான வயிரத்தினாலாகிய தோளணிகளானவை முறைப்படச் சொல்கின்ற இராசத குணத்தின் மேலாகி நிகழாநின்ற சாத்துவிக குணத்தினாலுண்டாகும் யாவராலும் புகழத் தகுந்த கீர்த்தியானது (பிரதாபத்திற்கு) மேலாக ஒளிர்கின்ற முறைமையினைக் காட்டாநிற்க. (வி - ம்.) தோளன்று வயிரமென்று கோடற் கேதுவாயுள்ள வயிரமென்க. வயிரம் வரையின்கண்ணுள்ளதாகலின், வாகுவலயத்தினும் வயிரமிருத்தல்பற்றி "வரை" யென்றார். தோளணிகளானவை முறைமை காட்டவென வினைமுடிவு செய்க. கடகத்திற்குமேலா யங்கதங்களிருத்தலின் "உம்பருற் றொளிர் முறைமை" என்றார், சாத்துவிக குணத்தாற் கீர்த்தியும் இராசத குணத்தாற் பிரதாபமுமுள வாதலின் செம்மணி யொளியைப் பிரதாபமாகவும் வயிரமணியைக் கீர்த்தியாகவுங் கூறினார். என்னை ? கீர்த்திக்கு நிறம் வெண்மையெனவும், பிரதாபத்திற்கு நிறம் செம்மையாகவும் கூறலினென்க. (74) | | கடகமங் கதங்க ணேரே கதிர்மதி மண்டி லத்தின் | | | சுடர்தர வும்ப ரங்கித் தொகுகதிர் மண்டி லஞ்செய் | | | படர்கதிர்க் குண்ட லங்கள் பரிதிபன் னிரண்டும் வேறு | | | தடவரை பெற்றொ ருங்கு சார்ந்தெழு காட்சி தோற்ற. |
(இ - ள்.) கடகமும், வாகுவலயமும், முறையாக சூரியமண்டிலம் போலவும் சந்திரமண்டிலம் போலவு மொளியினைச் செய்ய இவைகளுக்கு மேல் (ஏழு நாவுடன்) கூடிய அக்கினி மண்டிலத்தைப்போல வெளியினைச் செய்கின்ற பன்னிரு குண்டலங்களும் சூரியர் பன்னிரு வரும் வேறு பெருமைபொருந்திய உதயகிரியினை யடைந்து ஒருசேரப் பொருந்தியெழுகின்ற தோற்றம்போல விளங்க. (வி - ம்.) மண்டில மென்பதனை கதிர்மதி யிரண்டிடத்துக் கூட்டுக. கடகமும் அங்கதமும் இரண்டு மண்டிலம்போலச் சுடர்தர வென்க. அங்கி மண்டிலத்தைப் போலொளி செய்யுங் குண்டலமென்க. இம்முறையால் சூரியமண்டிலத்திற்குமேன் மதிமண்டிலமு மதன்மே லங்கி மண்டிலமு மிருத்தல் காண்க. பன்னிரு குண்டலத்திற்கும் |