| பன்னிருபுயங்களையுதயகிரியாகக் கொள்க. தடம் - பெருமை. முன்னர்க் கூறினாம்; ஆண்டுக் காண்க. நேரே - முறையே. தோற்ற - விளங்க. ஒருங்கு - ஒருசேர. தொகுதல் - ஈண்டு நாவுடன்கூடல். (75) | | மண்டிலம் பிறழா தோங்க வயங்கித ழாயி ரஞ்சூழ் | | | முண்டக மேனின் றன்ன முகமதித் திலக மாதோ | | | கெண்டருந் தவர்கள் யோகிற் குறிக்கொடன் னுருவங் காட்டக் | | | கண்டரு கருணை வெள்ளங் கதித்தொழு கமிழ்திற் பாய. |
(இ - ள்.) மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினையென்னு மண்டிலங்களாறு மாறுபடாம லோங்கிநிற்ப அவைகளின்மேலே விளங்குகின்ற ஆயிரமிதழ்கள் சூழ்ந்த தாமரைமலர் நின்றாலொத்த திருமுகமாகிய மதியின்கண்ணுள்ள திலகம் அரிய தவத்தினையுடைய பெரியார் மனதிற்கொண்டு யோகத்தி லிலக்காகக் கொள்கின்ற தன்னுடைய திருவுருவத்தைக் காட்டாநிற்க (அம்முகத்தின்கண் ணுள்ள) கண் தருகின்ற கருணையாகிய வெள்ளமானது (யோகுசெய்யும் போழ்தத்து அத்தாமரையிலிருந் தொழுகுகின்ற) அமிழ்தினைப்போலப் பாய. (வி - ம்.) திகலம் காட்ட அம்முகத்திலுள்ள கண் தருகின்ற வெள்ளம் பாயவென வினைமுடிவு செய்க. ஆதார மாறு மோங்கிநிற்க அவைகளின்மேலே விளங்குகின்ற ஆயிரந்தோட்டு முண்டகமென்க; அதனையொத்த முகமென்க. அதனிற்றங்குந் தன்னுருவமென்க. தாமரையாகக் கூறிய முகத்தின்கண்ணுள்ள கண்ணென்க. அமிழ்து - தேன். தன் - சிவம். திலகம் - மேலாகக் கொள்ளுதல். இதனைத் "திலக நீண்முடித் தேவரும்" என்னும் சிந்தாமணியடியானு முரையானு முணர்க. (76) | | இருவரா யிருந்து தான்வே றெனவவர் தமக்கு மேலாம் | | | ஒருவனே யென்ன வென்றூ ழொளிர்மதி யாகி வேறாய் | | | இருசுடர் விழிக்கு மீப்பா லிலகெரி விழிகொ லென்னப் | | | பொருநிய திலக மேலாற் பொழிகதிர்ப் பட்ட மின்ன. |
(இ - ள்.) பிரம விட்டுணுக்களாகிய இருவராகவிருந்து தான் அவர்களின் வேறென்று சொல்லும்படி அவ்விருவருக்கும் மேலான ஒருவனாகிய உருத்திரனையொப்பச் சூரியனும் ஒளியோடுகூடிய சந்திரனுமாகி இவர்களின்வேறாகிச் சூரியசந்திரர்களாகிய விழிகளுக்கு மேலிடத்தில் விளங்குகின்ற அக்கினிக் கண்ணென்று சொல்லும்படி யொத்த திலகத்தினுக்கு மேலிடத்தில் கதிரைப் பொழிகின்ற (நெற்றிப்) பட்ட மானது ஒளிர. (வி - ம்.) இருவராய்ப் பிரமவிட்டுணுக்களாய். ஒருவன் - ஒப்பற்ற உருத்திரன். என்றூழ் மதியாகி வேறாகி யிலகெரி யென்க. ஒளியுடைப் பொருள்கள் யாவும் பேரொளிப் பொதுமையையுடைய தீயின் சம்பந்தமுடையன வாதலின் "என்றூ ழொளிமதி யாகிவேறாய் இலகெரி" என்றார். திலகத்தை நெற்றிவிழியாகக் கொள்க. என்றூழ் - |