| சூரியன். இருசுடர்விழி - சூரியசந்திரர்களாகிய இறைவன் றிருவிழிகள். எரிவிழி - அக்கினியாகிய நெற்றிவிழி. பொருநிய - ஒத்த. (77) | | குவிதரு மாறா தாரக் குருமலர் மலர்த்து மாறு | | | சவிமுகப் பரிதி நாப்பட் டவிர்சிவ னுருவஞ் செங்கேழ் | | | அவிர்மணித் திலக மீக்க ணலங்கிய விதானம் பட்டம் | | | இவர்கதி ரிலம்ப கந்தோ ரணமென வெழின்மிக் கீட்ட. |
(இ - ள்.) குவிகின்ற மூலாதார முதலிய ஆறாதாரமாகிய நிறத்தோடு கூடிய தாமரைமலர்களை மலரச்செய்யு மொளியைத் தன்னிடத்தே யுடைய முகமாகிய ஆறு சூரியர்களின் நடுவட் டங்குகின்ற சதாசிவப் பெருமான் றிருவுருவம், செந்நிறத்தோடுகூடிய விளங்குகின்ற இரத்தின திலகமாகும். (திலகத்தினுக்கு) மேலாக நெற்றிக்கண் விளங்குகின்ற மேற்கட்டியாகும். நெற்றிப்பட்டமும் கதிரெழுகின்ற நெற்றிச் சூட்டும் தோரணமென்று சொல்லும்வண்ணம் அழகினை யதிகமாக வுளவாக்க. (வி - ம்.) ஆறாதாரமாகிய தாமரை மலர்களை விரியச் செய்யும் ஆறுமுகமாகிய பருதியென்க. ஆறுதிலகமும் அவ்வறுமுகப் பருதி கடுவட்டங்கிய ஆறு சதாசிவ வடிவமாகும். சூரியமண்டலத்திற் சிவபெருமா னெழுந்தருளியிருத்தலை "அன்ன மண்டபத் தங்கண னோர் பகல், மின்னுஞ் செங்கதிர் வேதிகை யொன்றின்மேன், மன்னு செங்கதிர் மண்டலத் துற்றன, னென்னவந்தங் கிருந்தனனென்பவே" என்னும் பிரபுலிங்கலீலைச் செய்யுளானறிக. இலம்பகம் - நெற்றிச்சூட்டு. இதனை, "கரும்பணி வளவயற் காமர் தாமரை, வரம்பணிந் ததனுதற் கிடந்த வார்செநெ, லரங்கணி நாடக மகளி ராய்நுதற், சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே" என்னுஞ் சிந்தாமணி (கேமசரி - 31) செய்யுளா னறிக. தலைக்கோல மென்பர் நச்சினார்க்கினியர். (78) | | உதரபந் தனவோ ராழி யொளியுரப் பலகைப் பல்கைப் | | | பிதிருறுப் பெறுழ்த்தோட் சேக்கைப் பிணைமுகப் பரிதி பொற்றேர்க் | | | கதிர்மணிக் கிடுகு கூம்பு கவினிய மேற்போக் கென்ன | | | முதிர்மணி தெரிந்து செய்த முயங்கொளி மோலி வாய்ப்ப. |
(இ - ள்.) இடையிற்கட்டும் உடையாகிய சக்கரத்தினையும். ஒளியோடுகூடிய மார்பமாகிய பலகையினையும், பன்னிருகரங்களாகிய சுற்றுறுப்புக்களினையும் தோளாகிய ஆசனத்தினையும் ஒன்றினோ டொன்று பின்னிய முகமாகிய சூரியனது அழகிய தேரின் ஒளிபொருந்திய அரதனங்க ளிழைத்துச் செய்யப்பெற்ற மரச்சுற்றும் மொட்டும் பொருந்திய மேற்போக்கென்று சொல்லும்வண்ணம் ஒளிமுதிர்ந்த அரதனங்களை யாராய்ந்தெடுத்துச் செய்த ஒளிகலந்த கிரீடம் பொருந்த. (வி - ம்.) உதரபந்தனமாகிய ஒரு சக்கரத்தினையும், உரமாகிய பலகையினையும், கரங்களாகிய சுற்றுறுப்புக்களினையும் தோளாகிய இருப்பினையுமுடைய பொற்றே ரென்க. சேக்கை - ஈண்டுத் தேரின் நடுவணிடுமாசனம். முகப்பரிதி - முகமாகிய சூரியன். கிடுகு - தேரின் |