| | பண்ணிசை வீணை மற்றும் படர்செவிக் கினிமை யாக்க | | | உண்ணிறை தியான வேத னொளிர்விழி விடுத்துக் கண்டான். |
(இ - ள்.) தேவர்கள் சொரிகின்ற பூமழை திருமேனிமுழுது மினிய பரிசத்தை யுண்டாக்க, மத்தளமும், ஒருகட்பறையும், தக்கையும், தகுணிச்சமும், குடமுழாக்களும், பண்ணோடுகூடிய இசையை யுடைய வீணையு மேனைய பிறவும் விரிந்தசெவிகளுக் கினிமையைச் செய்ய உள்ளே நிறையினையுடைய தியானத்தோடுகூடிய பிரமன் ஒளிர்கின்ற விழிகளைத் திறந்து தரிசித்தான். (வி - ம்.) இனிமையாக்க - இனிமைப் பரிசத்தை யுண்டாக்க. தண்ணுமை - மத்தளம். பதலை - ஒருகட்பறை. தக்கையும் தகுணிச்சமும் ஒருவகை வாத்திய விசேடங்கள். விடுத்து - திறந்து. நிறை - மனதினைப் பொறியின்வழிச் செல்லாது நிறுத்தல். (82) | | கதுமென வெழுந்து தன்னுட் கருதிய வுருவிற் றோற்றும் | | | விதுவணி பெருமான் மைந்தன் விரைமலர்ப் போது தாழ்ந்து | | | குதுகலம் பொங்கக் கண்கள் கோட்டமெய் யிழுகு வெள்ளம் | | | முதுநில நனைப்பச் சூழ்ந்து முன்னின்று துதிகள் விண்டான். |
(இ - ள்.) விரைவாக வெழுந்து தன்னுள்ளத்தே தியானித்த திருவுருவத்தைப்போலத் தோற்றுகின்ற சந்திரனையணிந்த இறைவனது புத்திரனாகிய முருகக்கடவுளின் வாசனை பொருந்திய மலரையொத்த பாதங்களில் வணங்கி மகிழ்ச்சியுண்டாகக் கண்கள் நீரைக் கொட்டா நிற்க உடலினொழுகுகின்ற கண்ணீர் வெள்ளமானது முதிய நிலத்தினை நனையா நிற்பச் சந்நிதானத்தின்கண்ணே நின்று தோத்திரங்களைச் சொன்னான். (வி - ம்.) தன்னுட் கருதிய வுரு - தன்னகத்திற் றியானித்த திரு வுருவம்போல, இன் : ஐந்தாவ தொப்புப்பொருள். குதூகலம் - மகிழ்ச்சி. (83) வேறு | | வானாதி பூத முதலான யாவும் வருவித் தளித்தி யவைமற் | | | றானாத வாவி தொழிலி்ற் கிளர்ப்ப வடைவிற் புணர்த்தி யவையாய் | | | ஊனாதி யூனி னுயிராதி யெண்ணி லுயிருக்கு ணின்ற வுணர்வும் | | | தானாதி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) வானினை முதலாகக்கொண்ட பூதமுதலான எல்லாப் பொருள்களையும் படைத்துக் காக்கின்றாய். அப்பூத முதலிய பொருள்களை எண்ணினமையாத வுயிர்கள் சகலாவத்தையிற் பொருந்தும் வண்ணம் முறைப்படி யுடலாகச் சேர்க்கின்றாய். அப்பூதங்களாகி, அப்பூதங்களாலாகிய உடம்புமாகின்றாய். அவ்வுடம்பின்கண்ணுள்ள உயிருமாகின்றாய். அளவிடப்படாத வுயிர்களினுள்ளே நின்ற அறிவுமாகின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணி நின்ற சீவன் முத்தரன்றி வேறியாவ ரறிய வல்லுநர். |