| (வி - ம்.) தொழிலிற்கிளர்ப்ப - சகலாவத்தையடைய. அவையாய் - அப்பூதங்களாய். ஊன் - ஆகுபெயர். அவையடைவிற்புணர்த்தி - அவ்வைம்பூதங்களை (சகலாவத்தையிற் கொணர) முறையாகவுடலைச் செய்கின்றாய். இகரம் : நிகழ்காலங் காட்டிற்று. இதனை, வருதி பெயர்தி வருந்துதி துஞ்சாய், - பொருதி புலம்புதி நீயுங் கருதுங்கால், பண்டினையை யல்லையாற் பாழித்தோட் கோதையைக், கண்டனையோ வாழிகடல்" என்னு முத்தொள்ளாயிரச் செய்யுளானறிக. தான் : அசை. அருளாகி நின்ற தவர் - நின்மல துரியாதீதத்தின் கண்ணே நின்ற சீவன் முத்தர். (84) | | துதையத்து வாவும் வடிவென்ன மொய்த்தி துகடீரு மைந்து மனுவும் | | | வதிவுற்றி யக்கு முடலிற் பணித்தி வளரைந்தொ ழிற்கு முதலாய்க் | | | கதுவுற்ற வொன்ப துருவுங்க லத்தி கழலாத காய மறிவாத் | | | ததைகிற்றி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) ஒன்றினோடொன்று முறையாகப் பொருந்திய மந்திரம், பதம், வர்ணம், புவனம், கலை, தத்துவமென்னும் ஆறத்துவாவினையும் திருவுருவென்று சொல்லும் வண்ணம் பொருந்துகின்றாய். ஆன்மாக்களிடத்துப் பொருந்திய குற்றம் நீங்குதற்கேதுவாய வஞ்சப்பிரம மந்திரங்களை எழுந்தருளியிருந்து (எவற்றையுமியக்கும்) திருமேனிபோல வமைந்தனை, வளர்கின்ற படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளலென்னு மைந்தொழிலுக்கு முதற்காரணமாய்ப் பொருந்துகின்ற ஒன்பது வடிவங்களினும் பொருந்துகின்றாய். நீங்காத திருவுருவும் அறிவாகப் பொருந்தி நிற்கின்றாய். நின்னை நின்மலதுரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணிநின்ற சீவன் முத்தரன்றி வேறி யாவரறியவல்லுநர். (வி - ம்.) அத்துவா - வழி. "அத்துவா மார்க்கத்துள்ளா னலனிவ னருமை தன்னை" என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்த வடியா னுணர்க. ஐந்துமனு - பஞ்சப்பிரம மந்திரம், ஐந்து பிரம மந்திரங்கள்; இம்மந்திரங்களிறைவன் றிருவுருவாதலை "மந்திரமதனிற் பஞ்ச மந்திர வடிவமாகத் தந்திரஞ்சொன்ன" என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்தி னடிகளா னுணர்க. ஒன்பதுரு - உருவத்திருமேனி நான்கு, அருவத் திருமேனி நான்கு, அருவுருவத்திருமேனியொன்று ஆக ஒன்பதுங் கண்டு கொள்க. கழலாத காயம் அறிவாகவென மாற்றுக. கில் ஆற்ற லுணர்த்தும் இடைநிலை. "அவ்விடத்தவரையார் காண்கிற்பார்" எனும் சிலப்பதிகாரம் (கொலைக்கள) அடியானு முரையானு முணர்க. (85) | | கலைகற்றி லாமை யிளமைக்க ணிற்றி | | | கலைமுற்று ணர்த்து முதிய | | | நிலைமைக்க ணிற்றி நிகழ்வேத மங்க | | | முதலாக நீடு கலைகள் | | | மலைவற்று ணர்த்து பொருண்முற்று மாதி | | | யவையொன்று மன்றி வளர்மெய்த் | | | தலைநிற்றி நின்னை யருளாகி நின்ற | | | தவரன்றி யாவ ரறிவார். |
|