நீக்கிவருகின்றாய். ஒளிபொருந்திய செம்மை நிறத்தினையுடைய கிரணங்களோடு கூடிய சூரியனைப்போல அச்சந்திரனால் நீங்காத மல விருண் முழுதுங்கெட விளங்கித் தோன்றுகின்றாய். ஆன்மாக்களாகிய வெளியேங்களை யடிமைகொள்ள எழுந்தருளிய திருவுருவினை அங்கியின் றிரட்சிபோலச் சோதிவடிவாக அடியேங்கள் அறியும்வண்ணம் முயற்சியின்கட் செலுத்துகின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணிநின்ற சீவன் முத்தரையன்றி வேறி யாவரறிய வல்லுநர். (வி - ம்.) நாளுற்று - முதனாண்முதலாகப் பொருந்தி. மதி - ஈண்டுமுற் பக்கத்துத் திங்கள். மதி யொவ்வொருநாளுங் கலைமிகப் பெற்று இருளினை நீக்குமாறுபோல திரோதானசத்தி வீழ்ச்சியுளவாகச் சிறிது சிறிதாக மலம் நீக்குகின்றாயென்பார். "நாளுற்றெழுந்த மதி போன் மலங்கள் நலியத் துரத்தி" யென்றார். செஞ்சுடர் தோன்றிய போழ்தத்தே யிருண்முழுதும் நீங்கிப் பொருள் பொறிகளுக்கு விடய மாதல்போல திரோதான சத்தியருட் சத்தியாக மாறிநிற்கச் சிவத்துவம் விளங்கலின் "வாளுற்ற செய்யசுடர்போல முற்றுமடியக் கிளர்தி" யென்றார். இதனை "மதிவளம் படைத்து நாளும் வளரிருள் சீக்கு மாபோல் - கதிவளம் படைக்குந் தூய கருணையெவ் வுயிர்கண் மாட்டும் - பதிவளம் படைத்துப் பாசம் பாற்றவெய் யவனிற் றோன்றிப் - பொதிவளம் படைக்கு மின்பப் பூரணப் பொருளைத் தாழ்வாம்" என்னுந் திருவானைக்காப் புராணச் செய்யுளா னறிக. தவிர்ந்த - ஈண்டெழுந்தருளிய. திருமேனி - ஆசிரியன் றிருவடிவம். தாள் - முயற்சி. (92) | பகைசெய்து நிற்கு முலகேது முள்ளம் படராத வண்ண மொளியின் | | மிகைசெய்தி ருத்தி யுடலூழெ னைத்தும் விரவாமை யேற்று நுகரா | | வகைசெய்து நிற்கு மறிவுங்கெ டுத்து மறியாமை யின்ப நிலையில் | | தகைசெய்தி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) (ஏகனாகி யிறைபணிநின்ற சீவன்முத்தர்களுக்கு) விரோதத்தினைச் செய்துநிற்கின்ற உலகின்கண் மனமானது சிறிதுஞ் செல்லாதவண்ணம் ஞானத்தின் மேம்பாட்டினைச் செய்து, எழுந்தருளி யிருக்கின்றாய். உடம்பு முகந்துகொண்ட பிரார்த்தவினை முழுவதும் (உலகியலின்கண் டோயாத வுயிர்கண்மாட்டுப்) பொருந்தாமல் நீயே ஏன்றுகொண்டு (அதனை யவ்வுயிர்கள்) அனுபவியாதவண்ணஞ் செய்து அருளான் முதலென்று நிற்குமறிவையுங் கெடுத்துச் சிவபோக நிலையின் கண் நின்று நழுவாமல் நிலைபெறுத்துகின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணிநின்ற சீவன்முத்தரையன்றி வேறியாவ ரறியவல்லுநர். (வி - ம்.) உலகு - ஏழாவதன் றொகை. ஏதும் - சிறிதும். படராத - செல்லாத. ஒளியின் மிகைசெய்தி - ஞானத்தின் மிகுதிப்பாட்டைச் செய்கின்றாய். உடலூழ் - உடம்பு முகந்துகொண்ட பிராரத்தவினை. ஏற்று - நீ யேன்றுகொண்டு. நுகராவகை - (அதனை யவ்வுயிர்கள்) அநுபவியாவண்ணம். நிற்கும் அறிவு - அருளான்முத லென்றுநிற்கு முணர்வு. மறியாமை - நழுவாமை. இச்செய்யுளின் கருத்தை "அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே யறிவுதனை யருளி" என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா னுணர்க. ஊழ் உண்டாவதற் குடலேதுவாகலின், "உடலூழ்" எனினுமாம். (93) |