| கலங்காத நின்மெய் யருளிற் புகாத கலதிக்கு ணத்தி "தையேன் | | விலங்கோடி ணைந்து மதியாத குற்றம் விரவாமை யன்று கயிலை | | நிலங்காதி விட்டி யருள்செய்யும் வைப்பு நிமிர்பூர ணக்கி ரியெனும் | | தலங்கோடி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) ஒன்றினுக்குங் கலங்குத லடையாத பெருமான் மெய்யருளின் கண்ணே செல்லாத கலககுணத்தையுடைய அறிவின்மையோடு கூடிய வடியேன் (செய்வதுந் தவிர்வது முறுவதுமறியாத) விலங்கினை யொத்து மதியாத குற்றத்தினைப் பொருந்தாமல் அக்காலத்தே கைலை மலைக்கண் அக்குற்றத்தினுக்குத்தக வொறுத்துவிட்டாய். எளியேனுக் கருள்செய்யு மிடமாக உயர்ந்த சீபூரணகிரி யென்னுந் தலத்தினை யிடமாகக் கொண்டாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணி நின்ற சீவன்முத்தரையன்றி வேறியாவ ரறியவல்லுநர். (வி - ம்.) கலதி - கலகம். இழுதை - அறிவின்மை. காதி - தண்டஞ்செய்து. விலங்கோடிணைந்து - விலங்கை யொத்து. வைப்பாக வென்னுஞ் செயவெனெச்சத் தீறுதொக்கது. (94) வேறு | வேத மத்தக மளைந்துகி டந்த விழுப்பெ ருந்துதியெ டுத்துந வின்று | | பேதை மைக்குணமி குத்தக ருத்தாற் பீடி லாதசிறு நாயடி யேன்செய் | | ஏத மத்தனையு மின்றுபொ றுத்திங் கின்ன ருட்கருணை நல்குதி யென்று | | மாதர் பொற்கமல பீடிகை மேலான் மறுவ லுங்கழல்ப ணிந்துநி மிர்ந்தான். |
(இ - ள்.) வேதத்தினுச்சியிற் கலந்து கிடக்கப்பெற்ற மிகச் சிறந்த தோத்திரங்களை யெடுத்துக்கூறி அறியாமைக்குண மிகப்பெற்ற எண்ணத்தினால் பெருமை யில்லாத நாயினுங்கீழான அடியேனிழைத்த குற்றமனைத்தினையும் இன்றுபொறுத்து இனியருளோடுகூடிய கருணையைக் கொடுப்பாயென்று காதலைத் தருகின்ற பொன்மயமாகிய தாமரை யாசனத்தின்மேலுள்ள பிரமன் மறுபடியுந் திருவடியை வணங்கி யெழுந்தான். (வி - ம்.) மத்தகம் - உச்சி. அளைந்து - கலந்து. மறுவலும் - மறுபடியும். மாதர் - காதல். தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. நிமிர்ந்தான் - எழுந்தான். (95) | மரக தக்கதிர்த ழைத்தக லாப | | மஞ்ஞை மீதுவரு மஞ்ஞையொ டொப்பான் | | வரந விற்றுதிவ ழங்குது மென்னா | | மகிழ்சி றந்துதிரு வாய்மலர் விண்டான் | | பரவு வேதன்மகிழ் கூர்ந்துப டைக்கும் | | பண்பெ னக்கருள்க வென்னவ ளித்து | | விரவு பண்புடையை யின்னும்வ ரங்கள் | | வேண்டு கென்னவயன் வேண்டுத லுற்றான். |
|