(இ - ள்.) மரகதமணியின் கிரணங்கள் தழைத்தாற்போன்ற தோகையோடு கூடிய மயின்மீது எழுந்தருளி வருகின்ற தாயையொத்த வனாகிய முருகக்கடவுள் (நீ விரும்பிய) வரத்தினைச் சொல்லுதி கொடுப்போமென்று மகிழ்ச்சி மிகப்பெற்று அழகிய வாயாகிய மலரைத் திறந்து கூறினான். துதிக்கின்ற பிரமன் மகிழ்ச்சி மிகப்பெற்று உலகத்தை யுளவாக்குந் தன்மையை எளியேனுக் கருள்செய்யக் கடவாயென்ன அதனைக் கொடுத்து, எம்மாட்டுக் கலந்த தன்மையையுடையை இன்னும் வரங்களை வேண்டிக் கோடல் செய்வாயாக என்று திருவாய் மலர்ந்தருளப் பிரமன் வேண்டிக்கோடல் செய்தான். (வி - ம்.) வேண்டுக வென்பது விகாரம். அஞ்ஞை - தாய். வேதன் - பிரமன். (96) | வேட்ட நல்வரம ளித்துவி டுக்கும் | | வீறி லார்கள்பலர் விண்ணவர் மாட்டும் | | வேட்ட நல்வரம னைத்தும்வ ழங்கார் | | வேட்ட மாத்திரைவி ளைப்பவர் சில்லோர் | | வேட்ட நல்வரம ளித்ததன் மேலும் | | வேறு நல்வரம்வி னாவிய ளிப்ப | | வேட்ட வண்ணல்கரு ணைத்திற நோக்கி | | விம்மி தப்புணரி விம்முமு ளத்தான். |
(இ - ள்.) (தவத்தினைச் செய்வோர்) விரும்பிய நல்ல வரங்களைக் கொடுத்து விடுத்தலைச் செய்யுந் தலைமையிலர்க ளாகிய விண்ணவர்களுள் வைத்து விரும்பிய நல்லவரங்க ளனைத்துங் கொடாராகி விரும்பிய வளவிற் கொடுப்பவருஞ் சிலராவர். விரும்பிய வரங்களைக் கொடுத்து அதன்மேலும் வேறாக நல்லவரங்களைக் கொடுக்க வினாவி யளிக்க விரும்பிய தலைவராகிய முருகக்கடவுளது கருணைத் திறத்தைக் கருதி வியப்பாகிய கடல் பெருகப்பெற்ற வுள்ளத்தையுடைய பிரமன். (வி - ம்.) தவஞ் செய்வோர் வேட்டவரங்களை அளித்தனுப்பும் பெருமை யில்லாதவர் எனவே அவர்க்கு வரமளிக்குந் தன்மையின் றென்பது போதரு மென்க. வழங்கார் - முற்றெச்சம். விம்மிதம் - வியப்பு. புணரி - கடல். (97) | சிறந்த பத்தியடி யேனின தாளிற் | | செல்வ நல்குரவி னும்புரி வாழ்வு | | மறந்து நின்னடியார் மாட்டுமி கந்த | | மதிப்பு றாமையும்வி ருத்தபு ரிக்கண் | | உறந்து வாழுநர்வெ றுக்கைய ராகி | | உன்னு கின்றகதி யெய்தலு மங்கண் | | அறந்த ழைத்தசிவ லிங்கமி றைஞ்சும் | | அன்ப ரென்னுலக மெய்தலும் வேண்டும். |
|