| நளிய ருட்புணரி யாங்கும றைந்து | | நலத்த கோயிலினை நண்ணின னன்றே. |
(இ - ள்.) எளியேனாகிய வடியேன் இவ்விடத்துக் கூறிய தோத்திரங்களை யன்புடன் கூறுகின்ற அன்புடையார்கள் ஆசு, மதுரம், சித்திரம் வித்தாரமென்னும் நான்கு பாவினையும் நடாத்துகின்ற களிப்புமிகுந்த புலவர்களாகி எல்லாச் செல்வங்களு மெய்தப்பெற்று எவ்வகை நோய்களையும் புறங்கண்டு அப்பொழுதே ஒளியைச் செய்கின்ற பெருமான் எழுந்தருளியிருக்கின்ற கந்தவுலகத்தினை யடைதல் வேண்டும். ஒப்பற்றவனே யென்று கூற வேண்டிய வரங்களையெல்லாம் அளித்துச் செறிந்த அருட்கடலாகிய முருகப்பெருமான் திருவுருக்கரந்து நன்மையையுடைய கோயிலை யடைந்தான். (வி - ம்.) உப்புடைகண்டு - புறங்கண்டு. (100) | பவள வாய்ச்சிறக ரோதிம மூரும் | | பண்ண வன்களித ழைத்தன னேகித் | | துவளி டைக்கலைம ணாட்டியொ டண்மித் | | தொன்று போலுலக ளித்திட லுற்றான் | | குவளை பூத்தொளிரு மத்தகு தீர்த்தங் | | கோத றும்பிரம தீர்த்தமெ னும்பேர் | | திவளி ரும்புகழி னோடுவி ளங்கித் | | தேவ ரும்படிய நின்றதை யன்றே. |
(இ - ள்.) பவழம்போன்ற வாயினையும் சிறகினையுமுடைய அன்னப்பறவையினைச் செலுத்துகின்ற பிரமதேவன் உவகை தழைக்கப் பெற்றவனாகிச் சென்று தளர்கின்ற இடையினையுடைய கலைமாதோடு பொருந்தி முன்போலச் சத்தியலோகத்தைக் காக்குந்தொழிலிற் பொருந்தினான். நீலோற்பல மலர்கள் பூக்கப் பெற்றொளிர்கின்ற அத்தகுதியுடைய தீர்த்தம் குற்றமற்ற பிரமதீர்த்தமென்னும் பெயர்பெற்று மிக்க புகழோடு விளக்கமுற்றுத் தேவர்களும் வந்து மூழ்கும்வண்ணம் நிலைபெற்றது. (வி - ம்.) தொன்றுபோல் - முன்போல். திவள் - விளங்குகின்ற. ஐ - சாரியை. (101) | எப்பெ ருங்கலையு ணர்ச்சிய ரேனும் | | எப்பெ ருந்துயரு ழந்தவி டத்தும் | | அப்பெ ருந்துயர மீட்டும்வி ளைக்கும் | | அத்த குந்தொழின்மு யங்குவ தன்றி | | ஒப்ப ருந்தலைவன் மெய்யரு ளின்ப | | வுததி மூழ்கும்வகை தன்னமு முன்னார் | | பப்ப ருந்துயர்பல் காலுமு ழந்தும் | | பங்க யன்றொழிலை மீட்டனன் மாதோ. |
|