நந்தி யுபதேசப்படலம் | மண்ணவருக் கிரும்புனலாய்த் தோன்ற நின்றே | | மண்ணமிர்தும் விண்ணமிர்தும் வழாமை யாக்கும் | | விண்ணவருக் கிருந்தீர்த்த மாகித் தோன்றி | | விண்ணமிர்துஞ் சிவவுலகும் விரவ வுய்க்கும் | | பண்ணரிய மாதவத்தோர்க் கருளாய்த் தோன்றிப் | | பரபோக வமிர்தமாய்ப் பலியா நிற்கும் | | நண்ணரிய புகழ்க்கடம்ப னழைப்ப நந்தி | | நந்தினியாந் தத்துவா மிருகந் தானே. |
(இ - ள்.) பொருந்துதற்கரிய புகழினையுடைய கடப்பமாலையை யணிந்த முருகப்பெருமானழைக்க நந்திக்கு மகிழ்ச்சியினை யுளவாக்குதலான் நந்தி நந்தினியென்னுந் திருப்பெயரினையுடைய தத்துவாமிர்த மென்னுந் தீர்த்தமானது பூமியின்கண்ணுள்ளவர்க்குப் பெரிய நீராகித் தோன்றி மண்ணினுக்குணவாகிய அமிர்தத்தினையும், விண்ணினுக் கவியாகிய உணவினையும் முறைதவறா துளவாக்கும், தேவர்களுக்குப் பெரிய தீர்த்தமாகித் தோன்றி விண்ணுலகத்திலுள்ள அமிர்தத்தினையும், சிவலோகத்தினையுங் கலக்கச் செலுத்தும், செய்தற்கரிய தவத்தினையுடைய முனிவருக்கு அருள்வடிவாகத் தோன்றி மேலாகிய போகமாகிய அமிர்தமாகிப் பலித்து நிற்கும். (வி - ம்.) நந்திக்கு மகிழ்ச்சியை யுளவாக்கலின் நந்தி நந்தினியென்னும் பெயர்த்தாயிற்று. நந்தம் - மகிழ்ச்சி, அதனைச் செய்வதனால் நந்தினியென்றாயிற்று. இதனை "வம்பணி முலையி னாரும் மாழையு மண்ணுமெல்லாம், வம்பெனக் கடந்த நந்தி யின்னண மகிழ்ந்த வாற்றால், வம்பவிழ் மலரும் பொன்னு மணிகளு மணிந்து செல்லும், வம்பெ" நதிப்பேர் நந்தி நந்தினி யென்ப மாதோ" என்னும் இப்படலம் (80) செய்யுளானறிக. நீர்பாய்தலான் உலகின்கண் ணுணவுப் பொருள்கள் விளைய அப்பொருள்களை யுயிர்களுண் டுடம்போடு காணப்பட்டு மேற் கதியினையெய்த வேள்வி வாயிலாகத் தேவர்கட் கவி கொடுத்தலின் "மண்ணமிர்தும் விண்ணமிர்தும் வழாமை யாக்கும்" என்றார். இதனை "வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று" என்னுந் திருக்குறளானு முரையானுமுணர்க. இறைவன் ஆன்மாக்களுய்யும் பொருட்டு மூர்த்தி தலந்தீர்த்தமென்னும் மூவுருக்கொண்டெழுந்தருளியிருத்தலின் இத்தீர்த்தம் தேவர்கள் படியின் தேவருலகத்தில் நீடூழிகாலம் வதியப்பெற் றின்பினை யனுபவிக்க வமிர்தத்தினையும், அவ்வுலக முடிவின்கட் சிவலோகத்தினையுந் தருதலின் "விண்ணமிர்துஞ் சிவவுலகும் விரவவுய்க்கு" மென்றார். இத்தீர்த்தம் இறைவனருள்வடி வாகலின் மூழ்கியவுடன் மலநீக்கப்பெற்று வீட்டின்பத்தினை ஆன்மாக்களெய்தலின் "அருளாய்த் தோன்றிப் பரபோக வமிர்தமாய்ப் பலியா நிற்கும்" என்றார். இதனை "மூர்த்தி தலந்தீர்த்தம் முறையாற் றொடங்கினர்க்கு - வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்னுந் தாயுமானார் திருவாக்காலுணர்க. மண்ணமிர்து - உணவு. விண்ணமிர்து - ஈண்டு யாகத்திடு மவி. விண்ணமிர்து - பின்னையது தேவா |