பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்319

(இறைவன்றடத்தம் சொரூபம் என்னுமிருவடிவங்களில்) சொரூப நிலையை யருளல்.

(7)

 ஐந்தொழிலி யற்றரசி ருக்கைகயி லாயம்
 ஐந்தொழில்க டந்தவரு ளாகுமஃ திங்கண்
 அந்தின்மிக வுந்தெரிவு றுக்குமடை வில்லை
 அந்தவரு ளுக்குரிய தாங்கணிக வெற்பு.

(இ - ள்.) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னுமைந்தொழிலினையுஞ் செய்கின்ற அரசிருக்கை கைலாயமாகும். இவ்வைந்தொழிலினையும் நீங்கிய அருளாகிய நீ விரும்பிய முத்தி இக்கைலாயத்தின்கட் செவியறிவுறுக்கு முறைமையுடையதன்று, அந்த வருளினுக்குரியதாகுந் தணீகைவரை.

(வி - ம்.) அஃது : நீ விரும்பியமுத்தி. அந்தில் : அசை. ஆன்மாக்களனுக்கிரகித்தால் அடையப்படுவது முத்தியாகலின் அதனை (ஐந்தொழில் கடந்தவருள்) என்றார்,

(8)

 ஒருமறை நாடரிய வுண்மையெனு ஞானம்
 ஆரவருள் பெற்றடிய ழுந்துமத னாற்சீ
 பூரணகி ரிப்பெயர்பொ ருந்துமள வில்லா
 ஏரணவு நம்முருவ மாயிலகு மன்றே.

(இ - ள்.) யாவரும் ஆராய்தற்கருமையான உண்மை யறிவினை அருளாற் பொருந்தப்பெற்று நமது திருவடியின்கண்ணே இரண்டறக்கலந்து நிறைந்து நிற்குந்தன்மையால் சீபூரணகிரியென்னுந் திருநமாத்தினைப் பொருந்தும், அளவிட முடியாத அழகு பொருந்திய நமது திருவாகி விளங்கும்.

(வி - ம்.) அடியிலழுந்தி நிறைவைப் பெறுதலால் சீபூரணகிரியென்றும் பெயர்த்தாயதென்க. பூரணம் - நிறைவு.

(9)

 எங்கணெவ ருஞ்சிறிது மேரருந மக்கும்
 அங்கணுயிர் யாவுமடி சேரும்வகை நாடித்
 தங்குமிளை யோனருட ருங்குரவ னானான்
 புங்கவன வற்குநிகர் பூரியரும் ளிள்ளார்.

(இ - ள்.) நமது திருவுருவமாக விளங்குந் தணிகைமலையின்கண் ஆன்மாக்களெல்லாந் திருவடியின்கண் இரண்டறக்கலக்கும் வகையினை யாராய்ந்து எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் எவ்விடத்தும் எவருஞ் சிறிது மொப்பாகாத நமக்கும் அருளினைத் தருகின்ற பரமாசாரியனானான். யாவரினு முயர்ந்தோனாகிய அவனுக்கு (மற்றொருவரை) ஒப்பாகக் கீழோருஞ் சொல்லார்.

(வி - ம்.) ஏர் - உவமவுருபு. நமக்குங் குரவனென முடிக்க. நாடித்தங்கிய வென்னும் பெயரெச்சம் இளையோன் என்னும் பெயர் கொண்டு முடிந்தது. புங்கவனாகிய அவனென்க. பூரியோர் - கீழோர்.

(10)