பக்கம் எண் :

320தணிகைப் புராணம்

 வெய்யமல வேர்துவர விட்டுநெறி யன்றிப்
 பொய்யமல நின்றமதம் புக்கவரு நாளும்
 ஐயனென வந்தடிப ணிந்தறமு ஞற்றி
 உய்யும்வகை யுங்கருணை யுய்த்தவணி ருக்கும்.

(இ - ள்.) கொடிய ஆணவமலத்தினது வேர்முற்றக்கெட வீட்டிற்கேதுவாகிய சைவசமய வழியிலன்றிப் பொய்ந்நிறைய நின்ற ஏனைய புறச்சமயத்தின்கண் புகுந்தவரும் ஒவ்வொருநாளுந் தலைவனென வந்து திருவடிகளில் வணங்கி அறத்தைச் செய்து பிழைக்கும் வகையுங் கருணைசெய்து அவ்விடத்திலெழுந்தருளியிருப்பான்.

(வி - ம்.) துவர - முற்ற, இதனை "துவரமுடித்த துகளருமுச்சி" எனுந் திருமுருகாற்றுப்படையா னறிக. அன்றி - அல்லாமல். உய்யும் வகையும் - பிழைக்கும் வகையும்; உம்மை யிழிபுசிறப்பு.

(11)

 அன்னவனை யேசரண டைந்தவணி ருந்து
 மன்னியபெ ருந்தவம்வ ழாதுபுரி கிற்பின்
 துன்னுமறை நாட்ரிய தூத்தகைய வேணின்
 நன்னருள மிக்குவகை நாறவெதிர் தோன்றி.

(இ - ள்.) அம்முருகனையே புகலிடமாகவடைந்து அத்தணிகையின்கண் ணடைந்து நிலைபெற்ற பெருந்தவத்தினை வழுவாமற் செய்யின் பொருந்திய வேதங்களும் தேடுதற்கருமையாகிய பரிசுத்தம் பொருந்திய முருகக்கடவுள் உன்னுடைய நல்ல உள்ளத்தின்கண் களிப்புமிகுந்து தோன்ற எதிரே தோன்றுதல்
செய்து,

(வி - ம்.) வேள்நின் எனப் பிரிக்க. நன்னர் - நன்மை.

(12)

 திரைத்துமணி சிந்திவரு தெய்வநதி யொன்று
 விரைத்தவண டுத்துறவி ளித்ததின ழுத்திப்
 புரைத்தசிவ வாரியும்பு குத்திவிடு மம்ம
 உரைத்தநதி மூலமுமு ரைப்பமறி மைந்த.

(இ - ள்.) அலையைச் செய்து முத்துக்களைச் சிந்திவருகின்ற தெய்வத்தன்மை பொருந்திய நதியொன்று விரைவாக அவ்விடத்து அடுத்துப் பொருந்த அழைத்து அந்நதியின்கண் மூழ்கச்செய்து உயர்ந்த வீடாகிய கடலின்கண்ணுஞ் சேர்த்தி விடுவான். யாஞ்சொல்லிய நதியின் மூலத்தையுமுரைப்போம்
மைந்தனே யறிவாயாக.

(வி - ம்.) விரைத்து - விரைவாக. சிவவாரி - மோட்சம். அம்ம : அசை. மூலம் - காரணம். மைந்த : விளி.

(13)

வேறு

 திருமகட் குரியதாய்ச் சிவணுந் தன்னியல்
 இருநிலந் தெரிப்பவவ் வேழை கொங்கையின்