| உருவவன் கனிபடும் வில்வ மோங்கிய | | பொருவில்சீர் வில்வமா புரமொன் றுள்ளதே. |
(இ - ள்.) சீபத்திரமென்னுங் காரணப் பெயருக்குரிமையாய்ப் பொருந்தும் தன்னிலக்கணத்தைப் பெரிய பூமியின்கண்ணுள்ளவர்களுக்குத் தெரிவிக்க அவ்விலக்குமியின் கொங்கைபோல உருவம் பொருந்திய வலிய கனிகள் பொருந்தும் வில்வமரங்க ளோங்கிய ஒப்பில்லாத சிறப்பினையுடைய வில்வமாபுரமென்னும் நகரமொன்றுள்ளது. (வி - ம்.) வில்வத்திற்குச் சீபத்திரமென்று பெயர். சீ - இலக்குமி. இதனைத் "செந்திருவை நேமியிறை சீயென வெறுத்தான்" என்னும் பிரபுலிங்கலீலைச் செய்யுளானறிக. இது கைலைக்கணுள்ளது. (14) | இருடபு நமக்கர சிருக்கை யாகிய | | திருவள ரத்தகு தேஎத்து நம்முடை | | உருவமா யைங்குவட் டோங்க லுள்ளது | | தருபெயர் வில்வமா சயில மென்பதே. |
(இ - ள்.) ஆணவவிருளை யோட்டுகின்ற நமக்கரசிருக்குமிடமாகிய செல்வங்கள் வளர்தற்கேதுவாகிய அத் தகுதியை யுடைய விடத்தில் நமது வடிவமாக ஐந்து சிகரங்களையுடைய மலையொன்றுள்ளது. அதற்கு உலகத்தா ரிட்டபெயர் வில்வமாசயில மென்பதாகும். (வி - ம்.) இறைவனுக்கும் ஐம்முகங்களுளவாதலின் அவ்வைம் முகங்களே ஐந்து குவடாமென்பார். "நம்முடை யுருவமா யைங்குவ டோங்கலுள்ள" தென்றார். (15) | கஞ்சவெற் பென்னவுங் கரைவர் யோசனை | | அஞ்சத னுயரமவ் வளவும் பூமியுள் | | துஞ்சுறச் சிகரமே தோன்ற நின்றெழில் | | விஞ்சும்யோ சனையொன்று விரிவி னெல்லையே. |
(இ - ள்.) பிரமன்மலை யென்றும் பெயர் கூறுவர். அதனுயரம் ஐந்து யோசனையாகும். அவ்வைந்து யோசனையளவு பூமியுள் மறைய அதன் குவடு தோன்றிநின்று அழகினால் மிகுதலைச் செய்யும். விரிவினளவு ஒருயோசனையாம். (வி - ம்.) கரைவர் - கூறுவர். அஞ்சு - மரூஉ. விஞ்சும் - மிகும். (16) | தெய்வமே கமழுமச் சிலம்பி னுச்சியில் | | சைவதத் துவமய தீர்த்தந் தானுள | | துய்வகை யெம்மொடா மொருமை யெய்துவான் | | கொய்வளம் புகழ்ச்சனற் குமர னண்ணுபு. |
(இ - ள்.) தெய்வத்தன்மை கமழுகின்ற அம்மலையின் குடுமியில் சிவதத்துவ தீர்த்தமுள்ளது. பிழைக்கும் வண்ணம் எம்மோடிரண் |