பக்கம் எண் :

322தணிகைப் புராணம்

டறக் கலக்குந் தன்மையை யடையும்பொருட்டுக் கொய்யத்தக்க அழகினையுடைய புகழோடு கூடிய சனற்குமரனானவன் பொருந்தி.

(வி - ம்.) சைவதத்துவ மயதீர்த்தம் - சிவதத்துவ தீர்த்தம்; இங்ஙனம் வருவதனை வடநூலார் "சுவார்த்த பரவத்தத்திதப் பிரத்யயம்" என்பர். வளம் - அழகு. இதனை "இளவள நாகு புல்லி யினத்திடையேறு நின்றால்" என வருஞ் சிந்தாமணி (காந்த - 262) செய்யுளானு மதனுரையானு முணர்க.

(17)

 தேங்கிய பெரும்புனற் றீர்த்த மாடுறீஇப்
 பாங்கிருந் தருந்தவம் பயிற்றி நம்மடி
 ஓங்கிய பூசனை யொழிவில் பத்திமை
 தாங்கியாற் றுபுமகிழ் தழைப்ப வைகுமால்.

(இ - ள்.) நிறைந்த மிக்க நீரோடுகூடிய அத்தடாகத்தின்கண் மூழ்கி அதன் பக்கலிலே தங்கிப் பிறராற் செய்தற்கரிய தவங்களைச் செய்து நமது திருவடியின்கண் உயர்ந்த பூசையும், நீங்குதலில்லாத பத்திமையும் மேற்கொண்டு செய்து நித்திய மகிழ்வுண்டாகத் தங்குவான்.

(வி - ம்.) தேங்கிய புனல்; பெரும்புனல் என இயைக்க. பெருமை ஈண்டு விரிவின்மேற்று.

(18)

 அத்தகு திருத்தமங் காறு கொண்டெழ
 உத்தம னுன்பொருட் டழைக்குமென்றுபின்
 வித்தகன் விடைதர வணங்கி மெய்யருள்
 பொத்திய வுளத்தினான் போதன் மேயினான்.

(இ - ள்.) அத்தன்மைத்தாகிய தீர்த்தம் ஆண்டைக்கு ஆறாக வெழும்வண்ணம் உத்தமனாகிய முருகன் உன்னிமித்தம் அழைப்பான் என்று திருவாய்மலர்ந்தருளிப் பின்னர் விடையளிக்க அருளால் மூடப்பட்ட வுளத்தையுடைய நந்தியெங் குரவன் செல்லுதலைத் தொடங்கினான்.

(வி - ம்.) ஆறாக வடிவங்கொண்டெழ என்க. உத்தமன் என்றது முருகன். வித்தகன் - சிவபெருமான்.

(19)

வேறு

 கயிலையங் கிரியை வணங்கின னீங்கிக்காமரு பேசுரம் பரவிப்
 பயிலிய நாகே சுரஞ்சித்த விடமும் பணிந்துமா மகேசுரந் தாழ்ந்து
 வெயின்மணித் தேனு சிலைநன்கே தாரம் வீமகோ டாரமு மிறைஞ்சிக்
 குயினுழை சோலைக் கெண்டகை வளர்கூர் மாசலந் தொழுதன னகன்றான்.

(இ - ள்.) கயிலைமலையை வணங்கி நீங்கிக் கண்டார்க்கு விருப்பம் வருகின்ற பேசுரமென்னுந் தலத்தை வணங்கிப் பொருந்திய நாகேசுரமும் சித்தவிடமுமாகிய தலங்களை வணங்கிப் பெருமைபொருந்திய