மகேசுரமென்னுந் தலத்தை வணங்கிச் சூரியகாந்தக் கற்களையுடைய தேனுசிலை, நல்லகேதாரம், வீமகோடாரமென்னுந் தலங்களை வணங்கி இலைநெருக்கத்தாற் குயில்கள் நுழைந்து செல்கின்ற சோலைகளையுடைய கெண்டகை யென்னும் நதியின்கரையில் வளர்கின்ற கூர்மாசலமென்னுந் தலத்தையும் வணங்கி நீங்கினன். (வி - ம்.) காமம்வருபேசுரம் : விகாரம். இதனைச் சிலப்பதிகாரம் அந்திமாலைச் சிறப்புச்செய் காதை - 40ஆம் வரியினுரையா லறிக. வெயின்மணி - சூரியகாந்தக்கல். குயில் நுழைசோலை - இலைநெருக்கத்தால் குயில்கள் நுழைந்துசெல்லும் சோலை. இதனை "வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்" என்னும் மணிமேகலை யடியா னுணர்க. உமாமகேசுரமுமாம். (20) | பரவிய பிரம ராசலஞ் சித்த பங்கமே மனோபங்க மெத்தி | | உரனரு ளிடப மால்வரை யுருரு பயிரவ மொளிர்விரூ பாக்கம் | | வரநனி யருளும் வில்வகஞ் சோம கேசுர மாரகங் காளம் | | விரவிய சீர்த்திப் பிப்பிலா ரணியம் வாரணா சியும்வியந் தகன்றான். |
(இ - ள்.) பரந்தவிடத்தினை யுடைய பிரமராசலம், சித்தபங்கம், மனோபங்கம் அறிவை நிறைத்தருளுகின்ற இடபமலை, உருரு, பயிரவம், விளங்குகின்ற விரூபாக்கம், வரத்தை மிகுதியாகத் தருகின்ற வில்வகம், சோமகேசுரம், மாரகங்காளம், யாண்டும் பொருந்திய கீர்த்தியினையுடைய அரசவனம், காசியுமாகிய தலங்களை வணங்கி யாச்சரியமுற்றகன்றனன். (21) | தெள்ளிய திரியம் பகந்தரு காளே சுரஞ்சங்க மேசுரந் தெரிசித் | | தொள்ளொளி விரிக்கு மல்லிகார்ச் சுனமு மோங்குகா ளத்தியும் போற்றி | | வள்ளவாய்க் கமல மிரவினும் விரிய வாளரா வுமிழ்ந்தசெம் மணிகள் | | அள்ளொளி கதிர்க்கு மடுக்கல்சூழ் சீபூ ரணகிரி தொழுதுசென் றடுத்தான். |
(இ - ள்.) விளங்கிய திரியம்பகமும், தகுதிபொருந்திய காளேசுரமும் சங்கமேசுரமும் ஆகிய தலங்களை வணங்கி மிக்க வொளியை விரியச் செய்கின்ற சீபருப்பதமும், உயர்ச்சி பொருந்திய காளத்தியென்னுந் தலமுமாகிய இவற்றை வணங்கிக் கிண்ணம்போன்ற வாயினையுடைய தாமரைமலர்கள் இராக்காலத்திலும் மலரும்வண்ணம் ஒளிபொருந்திய பாம்புகள் கக்கிய செம்மைநிறம் பொருந்திய மணிகள் அள்ளிக்கொள்ளத்தக்க ஒளிமிக்குத் தோன்றும் அரைமலைகள் சூழ்ந்த தணிகைமலையை வணங்கிப் போயடைந்தான். (வி - ம்.) மல்லிகார்ச்சுனன் - சீசைலம், அர்ச்சுனம், மருதம், இவை மூன்று மல்லிகார்ச்சுனம், மத்தியார்ச்சுனம், புடார்ச்சுனம் என்க. மல்லிகார்ச்சுனம் - சீசைலம். மத்தியார்ச்சுனம் - திருவிடைமருதூர். புடார்ச்சுனம் - திருப்புடைமருதூர். இது பாண்டிநாட்டில் பொருநை நதிக்கரையிலுள்ளது. இது மயக்கவணி. (22) | வெறிகமழ் கமல வோடையுந் தடமும் | | வேறுசூழ் வீராட்ட காசக் |
|