| | குறிகுணங் கடந்த சச்சிதா னந்தன் | | | குரைகழற் றாமரை வணங்கி | | | நறியசெங் கடப்பந் தாரணி சாமி | | | நாதனை யாவயிற் பணிந்து | | | செறிபொழி லுடுத்து முகிற்படாம் போர்க்குஞ் | | | சிலம்பினை யிவர்தரச் செல்வான். |
(இ - ள்.) வாசனை நாறுகின்ற தாமரை மலர்களையுடைய நீர்நிலையும், தடாகங்களும், வெவ்வேறாகச் சூழ்ந்த வீராட்டகாசமென்னுந் திருப்பதியின்கண் ணெழுந்தருளியுள்ள ஒரு நாமமு மோருருவு மில்லாத உண்மை யறிவானந்தனாகிய வெம்பெருமானது ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாத தாமரையை வணங்கி வாசனையோடுகூடிய செங்கடம்ப மாலையினை யணிந்த சாமிநாதனென்னுங் காரணப் பெயரினையுடைய முருகனை அவ்விடத்து வணங்கி, நெருங்கிய சோலையாகிய வுடையினை யுடுத்து மேகமாகிய மேற்போர்வையினைக் கொண்ட தணிகைமலையின் கண் ஏறச் செல்கின்றான். (வி - ம்.) ஓடை - நீர்நிலை. இதனை "ஓடை நீர்நிலை கிடங்காம்" என்னும் நிகண்டானறிக. குறி - பெயர். குணம் - உருவம். இதனை "ஒரு நாம மோருருவ மொன்று மில்லாற்கு" என்னும் திருவாசகத்தானறிக. சச்சிதானந்தமே இறைவனுக்குரிய சொரூபவிலக்கண மென்பார் "குறிகுணங்கடந்த சச்சிதாநந்தன்" என்றார். இதனை "உண்மையறி வானந்த வுருவாகி" என்னுந் திருவிளையாடற் புராணத்தானறிக. சாமிநாதன் : நான்காவதன்றொகை. பண்புத்தொகை யெனினுமாம். செல்வான் : வகரவொற்று நிகழ்கால விடைநிலை. முன்னர்க் கூறினாம். (23) | | வேயின முகுத்த நித்திலக் குவையும் விரிபணப் பொறியரா வுமிழ்ந்த | | | பாயிருள் பருகுஞ் செம்மணிக் குவாலும் படரிருள் குப்பைகொண் டன்ன | | | மாயிரு மணியும் பளிக்கின மணியும் மாழையின் றிரளுமோ ராங்குச் | | | சாயிளந் திங்கட் கண்ணியான் முகத்திற் றயங்குவ கண்டுள மகிழ்ந்தான். |
(இ - ள்.) மூங்கிற் கூட்டங்கள் சிந்திய முத்துக்குவியலும், விரிந்த படத்தினையும் புள்ளிகளையுமுடைய பாம்புகள் கக்கிய பரவிய விருளை யுண்ணுகின்ற செம்மைநிறம் பொருந்திய மணிகளின் கூட்டங்களும் உலக முழுவதும் படர்ந்த இருள் குவிந்தாலொத்த மிகக்கரிய நீலமணிகளும் பளிங்குமணியும் பொற்குவியல்களும் ஒருதன்மையாகிக் கலைகுறைந்த திங்களாகிய மாலையினை யணிந்த எம்பெருமானது ஐந்து முகங்களைப்போல விளங்குவதைக் கண்ணுற்று உளமகிழ்ச்சி கொண்டான்.(வி - ம்.) மாயிருமணி - நீலமணி. மாழை - பொன். ஒராங்கு - ஒரு தன்மை. சாயிளந் திங்கட்கண்ணியன் - கலைகுறைந்த பிறைமாலையை யுடையவன். சாய்தல் - குறைதல், இதனைச் "சாயு முகர நாலாறு மீறே " என்னும் நன்னூற் சூத்திரத்தானறிக. முகத்தின் : ஐந்தாவதொப்புப் பொருள். முகமைந்தன் பெயரும் நிறமும் வருமாறு. ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதமாம். இவைகட்கு நிறம் |