பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்325

முறையே பளிங்கு, கோங்கலர், கருமை, செம்மை, வெண்மையாம். இதனை "வடா துகுணக் கினைநோக்கு முச்சிமுகம் பளிங்கு வரைபெயரீ சானங்கிழக் கெதிர்முகங்கோங் கலரே - தடாதபெயர்த் தற்புருடம் வலத்தோண்மேற்றென்பாற் றனைநோக்கும் மயிர்சூழ்ந்த முகங்கரிய தகோரம் - விடாதிடத்தோண் மிசையுதக்குத் திசைநோக்குந் தெரிவை மிளிர்முகஞ்செம் மணிநிறஞ்சொற் பெயர்வாம மெருத்திற் - குடாதெதிர்ந்த முகம்வெண்மை சத்தியோ சாதங் - கொண்டுரைக்கும் பெயரிந்த வைந்துமுகத் தோடும்" என்னும் இந்நூலகத்தியப் படலம் - 434 செய்யுளானறிக. இஃதுவமையணி.

(24)

 முழங்கிசை யருவி வீழ்ந்தகழ் வரைப்பு
           முடலையாக் கையினெறுழ்ப் பொருப்பர்
 கிழங்ககழ் வரைப்பு மூடிக மகழுங்
           கேழ்கிளர் வரைப்புமொள் வயிரம்
 பழங்கணுற் றழுங்க விறைகடி வலாரி
           பற்றிய வச்சிரஞ் சிதர்த்துத்
 தழங்கிசைக் குன்றந் தன்மிசை வீழ்த்திக்
           கொண்டெனத் தயங்குவ கண்டான்.

(இ - ள்.) முழங்குகின்ற ஒலியோடுகூடிய வீழ்ந்து தோண்டப் பெற்றவிடமும், திரண்ட வுடலினையுடைய வலியோடுகூடிய மலைவாழ் நர் கிழங்கினை யெடுத்தவிடமும், பெருச்சாளி தோண்டிய நிறம் விளங்குகின்ற விடமும் துன்பமுற்று வருந்தச் சிறையினைவெட்டிய இந்திரன் பிடித்த வயிரப்படையினைத் தகர்த்து முழங்குகின்ற ஒலியினையுடைய மலையானது தன்மீது வீழச்செய்து கொண்டாற்போல விளங்குவதைக்
கண்ணுற்றான்.

(வி - ம்.) வரைப்பு - இடம். முடலை - திரட்சி ; இதனை "முடலை நோய் திரட்சி" என்னும் நிகண்டானறிக. எறுழ் - வலி. மூடிகம் - பெருச்சாளி. இறை - சிறை. தழங்கு - முழங்கு, வயிரம் - வச்சிரம்.

(25)

 களிற்றினந் தம்முட் கலாங்கொடு கறைவன்
           கால்பொரக் கழைமணி சிதர்ந்த
 ஒளிற்றுவெண் பூழி போர்த்துவெள் ளென்ன
           வுருவெலாங் கதிர்ப்பமிக் கிகலிப்
 பிளிற்றொடு பொருவ முருகனைத் தவத்தாற்
           பிடர்த்தலைச் சுமத்துவா னடுத்த
 வெளிற்றுட லிபங்கள் பொறாதுபோ ருழக்கும்
           வேற்றுமை தோற்றுவ கண்டான்.

(இ - ள்.) களிற்றியானை யினங்கள் தம்முள்ளே போரினை மேற் கொண்டு உரலினையொத்த காலான் மோதுதலான் மூங்கிலின் முத்தங்கள் பொடியாகி ஒளிருந்தன்மையினை யுடைய வொளிபொருந்திய