| தூசியானது போர்த்தலான் வெண்மை நிறமென்று சொல்ல வடிவெல்லா மொளிர மிக மாறுபட்டு முழக்கத்தோடு போர்செய்தல் முருகக்கடவுளைத் (முன்னர்த் தாங்கள் செய்த) தவத்தினால், தாங்கள் பிடரியின்கட் சுமக்கும்பொருட்டுத் தோன்றிய வெண்மை நிறத்தோடு கூடிய யானைகள் (நான்சுமப்பேன் நீ சுமக்கலாகாதென்று) மாறுபட்டுப் போரினைச்செய்யும் வேறுபாடு தோன்றுவனவற்றைக் கண்ணுற்றான். (வி - ம்.) கறை - உரல். கழை - மூங்கில். பூழி - புழுதி. கதிர்ப்ப - தோன்ற. வெளிற்றுடலிபம் - வெள்ளையானை. பொருதல் தோற்றுவவென முடிக்க. (26) | | செழுங்கலை மதியங் காண்டொறு மதன்றன் | | | சிலைகளுந் தீம்புனற் பெருக்கால் | | | கொழுங்குளிர் பெருக்க விரவிகாண் டொறுமக் | | | கொற்றவன் சிலைகளுங் கனலால் | | | அழுங்குருப் புறுத்தும் வரைநலூ ழடுப்பி | | | னாருநன் றேசெயத் தீதின் | | | விழுங்குவெந் துயரம்யாவருஞ் செய்யும் | | | வினைத்திறங் காட்டுவ கண்டான். |
(இ - ள்.) தழைத்த கலையோடுகூடிய மதியத்தினைக் காணுந்தோறும் அச் சந்திரகாந்தக் கற்களும் (சந்திரனைக் கண்டு கால்கின்ற) இனிய நீர்ப்பெருக்கினால் மிக்க குளிர்ச்சியினைப் பெருக்காநிற்ப, சூரியனைக் காணுந்தோறும் அச் சூரியகாந்தக் கற்களும் அழற்சியுற்று வெப்பத்தினை யுளவாக்கும் மலையானது ஆகூழடுப்பின் யாவரும் நன்மையே செய்யாநிற்கத் தீதினைத் தருகின்ற தீயவூழ் வந்துசேரின் வெப்பம் அதிகரித்தற் கேதுவாகிய துன்பத்தினை எத்தகைய பெரியாருஞ் செய்யும் வினையின் பாகுபாட்டினைக் காட்டுவனவற்றைக் கண்டான். (வி - ம்.) சந்திரனைக் காண்டொறும் வன்சிலை, நீரைப் பெருக்காநிற்ப சூரியகாந்தச்சிலை யுருப்புறுத்தும் வரையானது காட்டுவவென வினைமுடிபு செய்க. நல்லூழினை யடுத்தும் தீயவூழினை யடுத்தும் நின்ற வொருவனாக வரையைக் கொள்க. நல்லூழிற்குச் சந்திரனையும் தீயவூழினுக்குச் சூரியனையு முவமானமாகக் கொள்க. தீதின் ஊழெனக்கூட்டுக. உருப்பம் - வெப்பம். (27) | | விடரளைப் பூழைத் தூங்குவீங் கிருளும் வியன்றலை வாயிலிற் கிடந்த | | | சுடர்பளிக் கறையிற் றோற்றிய பரிதிச் சாயையிற் றூவொளி யிரித்திட் | | | டடர்மலந் துமியச் சிவப் பிரகாச மாகிய வடியரை யடுப்பின் | | | மடவருந் தூய ராவரென் றுரைக்கும் வாய்மையைத் தெரிப்பன கண்டான். |
(இ - ள்.) மலைப்பிளவாகிய தன்மாட்டுத் தங்கிய மிக்க இருளினையும் பெரிய அக்குகை வாயிலின்கட் கிடந்த ஒளியோடுகூடிய பளிக்குப் பாறையின்கட் டோற்றிய சூரியனது சாயையினிற் றோன்றிய தூய்மையான |