| ஒளியினாலே யோட்டி (ஆன்மாக்களை) வருத்துகின்ற ஆணவமலங்கெட சிவத்துவம் ஒளியாகி விளங்குகின்ற சிவஞானிகளை யடுத்தால் அறியாமையை யுடையோருந் தூயவராவரென்று சொல்லும் உண்மையினைத் தெரிப்பன கண்ணுற்றான். (வி - ம்.) பூழையானது தன்மாட்டுள்ள இருளினையோட்டித் தெரிப்பன. கண்டானென வினைமுடிவு செய்க. விடர் - மலைவெடிப்பு, இதனை "விடர்வெற்புக் கமரே தூர்த்தர்" என்னும் நிகண்டானறிக. அளைப்பூழை : இருபெயரொட்டு. பளிக்கறையை யடியவராகவும், பரிதியைக் கடவுளராகவும், பூழையை மடவாராகவுங் கொள்க. (28) | | இருவகை மாயை காரண மாக விலகுபல் புவனமு மிழைத்து | | | மருவுமப் புவனத் துயிர்களைப் புரப்ப வதிதரும் வள்ளல்போற் சிலம்பி | | | பொருவினூல் வலந்து தங்கிய வலயம் பொலிந்தபைம் பூவைகண் மாயன் | | | பரிதிமார் பணிந்த கருநிறத் தவுணப் பதகனிற் றோன்றுவ கண்டான். |
(இ - ள்.) சுத்தமாயை யசுத்தமாயை யென்னு மிருதிறத்து மாயையினை யுபாதானமாகக்கொண்டு விளங்குகின்ற பல புவனங்களையும் படைத்து அங்ஙனம் படைத்த புவனங்களிற் பொருந்துமான்மாக்களைக் காக்க எழுந்தருளியிருக்கின்ற பரமோபகாரியாகிய சிவபெருமானைப்போலச் சிலந்திப் பூச்சியானது ஒப்பில்லாத தன்மாட்டுள்ள நூலினைச் சுற்றித் தங்கிய (நூல்) வட்டங்கள் பொருந்திய பசிய காயாமரங்கள் திருமாலினது சக்கரத்தினை மார்பின்கண் அணிந்துகொண்ட கரிய நிறத்தோடுகூடிய அவுணர்களுள் வைத்துப் பாதகனாகிய தாரகனைப்போலத் தோன்றுவனவற்றைக் கண்ணுற்றான். (வி - ம்.) இருவகை மாயை - சுத்தமாயை, அசுத்தமாயை, வதிதரும் - அவ்வப்புவனத்தி லெழுந்தருளியிருக்கும். வலந்து - சுற்றி. பரிதி - சக்கரம். பதகன் - தாரகன்; இவன் சூரன்றம்பி. இவன்றிருமால் விடுத்த சக்கரத்தினைத் தன்மார்பின் மாலையாகத் தங்கும்படி செய்தவன். இதனை "ஓரிமை யொடுங்குமுன்ன ருலகெலாந் தொலைக்குந் தன்மைப் - போரயி னேமிதானும் புராரிதன் வரத்தாற் சென்று - தாரக வசுரன் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன் - னாரம தாயிற்றம்மா தவத்தினு மாக்க முண்டோ" என்னுங் கந்தபுராணச் செய்யுளானறிக. (29) | | தூயவிஞ் ஞான கலர்க்கரு டானே தோன்றுமா றெனமயிர்க் குட்டி | | | மேயவண் டுருவாய்த் தன்னுருக் கழிக்கும் விம்மித மொருபுறங் காட்ட | | | நாயக னெதிர்நின் றருண்மய மாக்கு நன்மையா ரெனப்புழுக் குளவி | | | யாயவற் புதமு மொருபுறங் காட்ட வானந்த முகிழ்த்தெழக் கண்டான். |
(இ - ள்.) பரிசுத்தம் பொருந்திய விஞ்ஞானகலரென்று சொல்லும் பரிபக்குவமுடையார்க்குத் தன்மைக்கண் இறைவன் றிருவருடானே தோன்றுமாறுபோல மயிர்க்குட்டி என்னும் புழு பொருந்திய வண்டின் வடிவாகித் தன் வடிவினை நீக்கும் அதிசயத்தினை யோரிடங் காட்டவும், மற்றோரிடம் இறைவன்றானே எதிர்நின்று தன் திருவருள் மயமாக்கும் பிரளயாகலர் போன்று புழு குளவியாகின்ற வியப்பினைக் காட்டவும், இன்பந் தோன்றுமாறு கண்ணுற்றான். |