பக்கம் எண் :

328தணிகைப் புராணம்

(வி - ம்.) விஞ்ஞானகலர் - ஒருமலமுடையார். தானே தோற்றல் -இறைவனவரறியாமலே யுள்ளே நின்றுணர்த்தல். நன்மையார் - இருமலமுடைய பிரளயாகலர். இவர்க்கிறைவன் முன்னிலைக்கணின்றருள் செய்வன். இக்கருத்தினை "மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ்ஞான கலர்க் - கஞ்ஞான வச்சகலர்க் கக்குருவாய் - மெய்ஞ்ஞானம் - பின்னுணர்த்து மந்தப் பிரளயா கலர்க்கு - முன்னுணர்த்துந் தான்குருவாய் முன்ழு சிவஞானபோத வுதாரண வெண்பாவாற் காண்க. மயிர்க்குட்டி - முசுக்கட்டை அல்லது கம்பளிப்பூச்சி யென்பார். புழு - வேட்டுவாளியென்னும் பச்சைப்புழு. கம்பளிப்பூச்சி வண்டாதலையும், வேட்டுவாளி யென்னும் பச்சைப்புழு குளவியாதலையும் "வண்டுக ளாகி மாறு மயிர்க்குட்டி மற்றோர் சந்துப். பண்டைய வுருவந் தானே வேட்டுவ னாய்ப்பிறக்குங் - கண்டுகொள் யோனி யெல்லாங் கன்மத்தான் மாறு மென்றே, கொண்டன சமய மெல்லா மிச்சொன்னீ கொண்ட தெங்கே" என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்தானறிக.

(30)

 தாரெனப் பூக்கு மராமரந் தடைஇய தாமங்க டூக்குபொன் னிதழி
 ஏரியற் பாவை யேந்துபைங் குரவ மீண்டுமா னுடம்பழு கிலுத்தம்
 வேரியந் திமிசு மிரவிதே ராழி மெலியவாங் கதற்கெதி ருருளை
 நேருவ போலத் தேத்திறால் சுமந்து நிமிர்வன விடந்தொறுங் கண்டான்.

(இ - ள்.) மாலையைப்போலப் பூத்தலைச்செய்யும் கடம்பமரமும், பெருமை பொருந்திய மாலைகளைத் தொங்கச் செய்கின்ற கொன்றை மரங்களும், பாவையைப்போலப் பூவைத் தாங்கு மராமரமும் நெருங்கிய மக்கள் வடிவாகப் பழுத்தலைச் செய்யும் கிலுத்தமென்னு மரமும், வாசனையோடுகூடிய அழகிய திமிசென்னு மரங்களும், சூரியனது தேரின்கண்ணுள்ள சக்கரங்கெட அதற்கு மாற்றுருளை கொடுப்பன போலத் தேன்கூடுகளைச் சுமந்து உயர்வனவற்றை இடங்கடோறுங் கண்ணுற்றான்.

(வி - ம்.) தார் - மாலை. மராமரம் - கடம்பமரம், இது மாலை போலக் கொத்தாகப் பூத்தலின் 'தாரெனப் பூக்கு மராமர'மென்றார்; இதனை 'பராரை மராஅத்துருள் பூந்தண்டார் - புரளுமார்பினன்' - எனவருந் திருமுருகாற்றுப்படை யடியானு முரையானு முணர்க. பாவை யேந்து குரவம் முன்னர்க் கூறினாம், மானுடம் பழுகிலுத்தம் - மக்கள் வடிவாகப் பழுத்தலைச் செய்யும் கிலுத்தமென்னு மொருவகை மரம்; இதனை 'மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றயல், பான்முரட் பயம் பிடைப் பனைமடிந் தனையன - கானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழ வூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே' என்னும் சிந்தாமணி (விமலை - 12) செய்யுளானு முரையானு முணர்க. திமிசு - ஒருவகை வாசனை மரம். இதனைச் 'சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின்' என்னுஞ் சிந்தாமணி - யிலம்பகம் 13ஆம் செய்யுளானறிக. தேத்திறால் - தேன்கூடு. இதனிலக்கணம் முன்னர்க் கூறினாம்.

(31)

 ஆயிரத் தோரெட் டண்டமும் பரிக்கு மவுணனை யஞ்சியாங் காங்கு
 மேயின குலிசப் படையின ரெல்லாம் வேற்றுருக் கொண்டன ரண்மிப்
 பாயின புகழான் பதந்தொழப் பெற்றுப் பரிவுதீர்ந் தார்ப்பன போலக்
 காயிலைப் பொழிற்கட் கண்படு முடலக் களிமயி லகவுவ கண்டான்.