பக்கம் எண் :

332தணிகைப் புராணம்

துளும்புகின்ற அழகிய படிகளின் மீதேறி ஒளியோடு கூடிய மணிகள் பதிக்கப்பெற்ற கோயிலை யடைந்தான்.

(வி - ம்.) அந்தில் - அவ்விடம். ஆதனம் - சுகாசனம், பத்மாசன முதலிய ஆசனங்கள்; இவை யோகவுறுப் பெட்டனுள் ஒன்று அஞ்சலி வணக்கம்: இருபெயரொட்டு. சூழ்போதல் - வலஞ்செய்தல். சுந்தரம் - அழகு. சோபானம் - படி.

(38)

 மணிகுயின் றெடுத்த மாடநீண் மறுகு வலம்வந்து மயிலிருந் தகவும்
 திணிநெடுங் கொடிய மூர்தியு நின்ற திருமுன்னர்த் தாழ்ந்தெழுந் தேகித்
 தணிகுந ரிடுக்கண் டாழ்த்தரு ளாவச் சகாயனைத் தாண்மலர் பழிச்சித்
 துணிமதி மலைத்த குமாரலிங் கத்துத் துவரொளி வண்ணனைத் தொழுதான்.

(இ - ள்.) மணிகள் பதிக்கப்பெற்றுச் செய்யப்பெற்ற திருமாளி கைப்பத்தியினை வலஞ்செய்து மயிலானது தங்கிக்கூவும் திண்ணிய நீண்டகொடியும், வாகனமும் நின்ற சந்நிதியின்கண்வணங்கி யெழுந்து சென்று வணங்குநரின் றுன்பங்களைத் தாழ்ந்தருளிய ஆவச்சகாயனது திருவடி மலர்களைத் துதித்துத் தெளிந்த கலைகளோடுகூடிய சந்திரனைச் சூடிய குமாரலிங்கத்தின்கண் பவளம்போன்ற நிறத்தினையுடைய சிவ பெருமானை வணங்கினான்.

(வி - ம்.) மயிலிருந்தகவுங்கொடி - மயிலைப்பொறித்த கொடி. ஊர்தி - மயில், யானையுமாம். துணி - தெளிந்த.

(39)

 ஆவயி னகன்று புணர்தொறும் புதிதா யணித்துமா யருமறைச் சிரமும்
 பாவனைத் திறமுங் கடந்தெழு மின்பப் படரொளிப் பிழம்புரு வான
 ஆவியை யிச்சை யறிவொடு தொழிலென் றவையொரு மூன்றுமூ விலையாய்
 மேவிய மணிவேல் வலனுயர்த் தருளும் வீரனை யணுக்கனாய்த் தொழுதான்.

(இ - ள்.) அவ்விடத்தினின்றும் நீங்கிக் கூடுந்தோறுங் கூடுந்தோறும் புதியதாகி அண்மைக்கண்ணுள்ளதுமாய், அரிய வேதங்களின் முடிவும் சிந்தனையின் வகையுங்கடந்து உளவாகின்ற இன்பமாகிய படர்கின்ற ஒளிவடிவாகிய உயிருக்குயிர் போன்றவனை அறிவிச்சை செயலென்று சொல்லப்பெற்ற ஒப்பற்ற அம்மூன்றும் மூன்றிலையாகப் பொருந்திய அழகிய வேற்படையினை வெற்றிக்கடையாளமாக வுயர்த்தியருளும் முருகக்கடவுளை நீங்காதவனாகித் தொழுதான்.

(வி - ம்.) புணருந்தொறும் புதிதாய் - என்பதற்கு "உணர்ந்தார்க் குணர்வறியோன்...........புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும்போகம்" என்னும் திருக்கோவையிற் பொருள் கொண்டாங்குக் கொள்க. பாவனை - சிந்தனை. உயிர் போறலின் "ஆவி" என்றார். இச்சை ஞானக் கிரியை மூன்றும் மூவிலைவடிவமா மென்பார், "இச்சையறிவொடு தொழிலென்றவை யொருமூன்று மூவிலையாய், மேவியமணிவே" லென்றார், வீரன் - முருகன். ஆவியை வீரனைத்
தொழுதானென்க.

(40)

வேறு

 விழிகா லருவிக ளடியூ டிழிதர
           விரிபூ வனையகை முடியேறப்