| | பொழிமா மறைமொழி விரியப் புலன்வழி | | | விரியுற் றலமரு பொறிகூம்ப | | | இழுதா யுருகுளம் வயிரத் தொடரென | | | விமிழ்கொண் டடிமல ரிறுகப்போய்த் | | | தொழுமா தரவின னுழுவற் றொடுகடன் | | | முழுகித் துளைபவன் வழிநாளான். |
(இ - ள்.) கண்கள் பொழிகின்ற அருவிகள் பாதங்களிடத் தொழுக விரிந்த மலரினை யொத்த கைகள் தலையின் கண்ணே பொருந்த, வாயினின்றுந் தோன்றுகின்ற பெரிய வேத வசனங்கள் பரவ சுவையொளி யூறோசை நாற்றமென்னும் புலன்களிடத்துப் பரவிச் சுழல்கின்ற மெய்வாய் கண்மூக்குச் செவியென்னு மைம்பொறிகளுந் தடைப்பட நெய்யினைப்போல வுருகுகின்ற வுள்ளமானது வயிரச் சங்கிலிபோல இளகுதல்கொண்டு பாதமாகிய மலரினிடத்து இறுகும்படி சென்று வணங்குமாசையினனாகி எழுமையுந் தொடர்ந்த அன்பாகிய தோண்டப் பெற்ற கடலின்கண் மூழ்கி யனுபவிப்பவன் பின்நாளின்கண். (வி - ம்.) கூம்ப - தடைப்பட. வயிரத்தொடர் - வயிரச்சங்கிலி. இழுது - நெய், இமிழ்தல் - இளகுதல். ஆதரவு - ஆசை. நாளான் - நாளின்கண்; ஏழாவதன்றொகை. ஆன் - அசை. (41) | | திரையுந் திரைதவழ் நறுநீர் முழுகுபு | | | திருநீ றுடன்முறை யொளிர்வித்து | | | விரைதண் மலர்தளிர் கனிகாய் மதுமுதல் | | | வெற்பிற் பொதுளுவ தழுவிச்சென் | | | றுரைநெஞ் சுடலமு மதியா முருகன | | | தொளிர்தா ணறுமலர் வழிபட்டுக் | | | குரைபைம் புயறவழ் கிரிசூழ் பொழுதொரு | | | குகைமேற் றிசையெதிர் கண்ணுற்றான். |
(இ - ள்.) திரைத்தலைச் செய்கின்ற அலைகள் தவழ்கின்ற நல்ல தீர்த்தத்தின்கண் மூழ்கித் திருநீற்றிணை யுடலின்கண் (ஆகமங்களிற் கூறிய) முறைப்படி அணிந்து வாசனையுடன்கூடிய குளிர்ந்த மலர்கள், தளிர்கள், கனிகள், காய்கள், தேன் முதலாக மலையின்கட் பொருந்துவனவற்றைக் கையின்கட்கொண்டு சென்று வாக்கு, மனம், காயமாகிய மூன்றானு மதித்து முருகப்பெருமானது ஒளிர்கின்ற தாளாகிய நல்ல மலரை வழிபாடுசெய்து ஒலிக்கின்ற பசிய மேகங்களூர்கின்ற மலையை வலம் வரும்பொழுது ஒரு குகையினை மேற்றிசைக்கண்ணே யெதிரே கண்டனன். (வி - ம்.) திரையும் - திரைக்கின்ற. மதியா - மதித்து. சூழ்பொழுது - வரும்பொழுது : முழுகுபு - வினையெச்சம்; முழுகி என்பது பொருள். (42) | | கோலத் திணிவரை வாய்விண் டனவொளிர் | | | குருமா மணிஞெமிர் குகையண்மி |
|